பிக் பாஸ் 8: கன்ஃபார்மான போட்டியாளர் ரவீந்தர்..பண மோசடி வழக்கில் கைது.. தாக்குவாரா விஜய் சேதுபதி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நாளை மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தயாரிப்பாளரும், சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவரை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். யாருக்கும் தெரியாமல் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருப்பதியில் பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் திருமணம் இணையத்தில் பெரும் பேசு பொருளான நிலையில், இருவரும் போட்டி போட்டுக்கு கொண்டு சேனல் சேனலாக சென்று பேட்டி கொடுத்தனர்.

bigg boss tamil bigg boss tamil season 8 ravinder

திடீர் கைது: இதையடுத்து, கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ரவீந்தர் சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கலை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முற்றிலும் பொய்: அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார் இது அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியது. இதன்பின் காவல்துறையினர் ரவீந்திரனின் வங்கிக்கணக்கை ஆராய்ந்ததில் பல வங்கி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும், இந்த வழக்கில் தொடர்புடையதா என தெரியவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, இரண்டு வாரத்திற்குள் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

bigg boss tamil bigg boss tamil season 8 ravinder

தாக்குவாரா விஜய் சேதுபதி: தற்போது ஜாமீனில் இருக்கும் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. கடந்த முறையே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும், எனக்காக இருக்கை, மெத்தை என அனைத்தையும் மாற்றுவதாக நிகழ்ச்சி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால்,அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்போது பிக் பாஸ் சீசன் 8ல் இவர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தனது யூடியூப் சேனலில் பிக் பாஸ் போட்டியாளர்களை கடுமையான விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிடும் இவர், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல இருக்கிறார். இதனால், வீட்டிற்குள் நிச்சயம், அவர் சும்மா இருக்க மாட்டார் என்றும், பாவம் விஜய் சேதுபதியின் தலை தான் உருளப்போகிறது என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X