வெளியே வந்ததுமே பிரேக்அப்.. அர்னவ் பற்றி அன்ஷிதா சொன்ன அந்த வார்த்தை.. ஷாக்கான தொகுப்பாளர்!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 94 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இதில் 84 நாட்கள் வீட்டில் இருந்த அன்ஷிதா எலிமினேட் ஆகி வெளியில் வந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது விஷாலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அவர், இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் செல்வதற்கு முன் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் வெளியில் நான் தைரியமாக சமாளித்து பதில் அளித்தாலும், வீட்டுக்குள் வந்ததும், அந்த விஷயங்களை நினைத்து உடைந்து பலமுறை கதறி அழுது இருக்கிறேன்.

மக்களின் அன்பு: அந்த நெகட்டிவ் விமர்சனத்தை போக்க வேண்டும், அந்த விமர்சனங்கள் எல்லாம் பொய், நான் இப்படிப்பட்டவள் என்பதை, ப்ரூவ் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். நான் நினைத்தது போல வெளியில் வந்த பிறகு நிறைய அன்பு கிடைத்து இருக்கிறது. மக்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக பார்ப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல நண்பர்கள் : நான் அருணின் காதில் விஷாலை பேரை சொல்லி காதலிப்பதாக சொன்னதாக பல விஷயங்களை வெளியில் பேசுகிறார்கள். உண்மையில் நான் அருணின் காதில் எந்த பெயரையும் சொல்லவில்லை. விஷால் உண்மையில் எனக்கு ஒரு நல்ல நண்பன். அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது. உண்மையில் விஷால் மேல் எனக்கு காதல் இருந்தால், இப்படி ரகசியமாக வைத்திருக்க மாட்டேன் அனைவர் முன்பும் என்னுடைய காதலை தைரியமாக சொல்வேன். நீங்களாக ஏதேதோ கற்பனை செய்து எதையாவது எழுதி விடாதீர்கள் இதுதான் என் வாழ்க்கையில் நடக்கிறது. தயவு செய்து என் வாழ்க்கையை வாழ விடுங்கள்.
பிரேக் அப் செய்துவிட்டேன்: அதே போல நான், விஷாலிடம் அர்னவ் பெயரை சொல்லி வெளியில் போனதும் பிரேக்அப் செய்வேன் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஷாலின் அர்னவ் பெயரை சொல்லவில்லை, என் எக்ஸ் பெயரைத்தான் கூறினேன். நானும் அர்னவும் ஒரு சீரியலில் 3வருடம் ஒன்றாக நடித்தோம். நல்ல நண்பர்கள். அந்த எக்ஸால், நான் பல கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன், வெளியில் போனதும் என் முதல் வேலை அவனை ப்பார்த்து பேச வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்னது போல, வெளியில் வந்ததும், அவரை சந்தித்து, கெத்தா Breakup பண்ணிட்டேன். இப்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று அன்ஷிதா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











