BB8: மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் சூப்பர்..விஷால் கொடுத்த முத்தம்.. தியேட்டரில் அலப்பறை செய்த சௌந்தர்யா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியா, யூடியூபர் ஹரிபாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங். நகைச்சுவை காமெடி திரைப்படமான இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில்,பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக வந்து தியேட்டரில் அலப்பறை செய்தனர்.

காலேஜில் படிக்கும் லாஸ்லியாவை ஹரி பாஸ்கர் காதலிக்கிறார். ஆனால் லாஸ்லியா அவரது காதலை ஏற்கவில்லை. இதனால்,விரக்தி அடைந்த ஹரிபாஸ்கர், இந்த 4 ஆண்டுகளில் வேறொரு பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என சவால் விடுகிறார். ஆனால், 4 ஆண்டுகள் கழித்து ஹரிபாஸ்கர் காதலித்த பெண்ணுக்கு திருமணமாகிறது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் ஹரிபாஸ்கர். அவரை நண்பர் ஷாரா மீண்டும் வெளியே அழைத்து செல்கிறார்.

bigg boss season 8 8

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: ஒரு கட்டத்தில், ஹரி பாஸ்கருக்கு வேலை இல்லாததால், ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்கிறார். அந்த வீட்டில் தான், லாஸ்லியா இருக்க,மீண்டும் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரியை புரிந்துகொண்ட லாஸ்லியா அவரை பெஸ்டி ஆக பார்க்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஹரி, தன்னை லாஸ்லியா காதலிப்பதாக தவறாக நினைத்துக்கொள்கிறார். இதன் பின் என்ன ஆனது? என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் லாஸ்லியாவின் காதலனாக பிக் பாஸ் ராயன் நடித்து இருக்கிறார்.

முத்தம் கொடுத்த விஷால்: ரயான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் ப்ரோமோஷக்காக லாஸ்லியாவும் ஹரிபாஸ்கரும் வந்திருந்தனர். அப்போதே, பிக்பாஸில் வீட்டில் இருந்தவர்கள், அனைவரும் படம் வெளியானதும் நிச்சயம் நாங்கள் படத்தை பார்ப்போம், ரயானுக்கு எங்களின் ஆதரவு உண்டு என்று பேசி கூறியிருந்தனர். அதேபோல, நேற்று படம் வெளியான நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிஸ்டா ஹவுஸ் கீப்பிங் படத்தை பார்த்தனர்.

சூப்பரா இருக்கு: அப்போது பேசிய விஷால், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்திற்கு எங்களின் பெரிய வாழ்த்துக்கள். இந்த படத்தில் எங்களின் நண்பன் ரயான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தை பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் ஒரு இளைஞர்களுக்கான திரைப்படம் ஆக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்தால் நிச்சயம் அது வெற்றிகிடைக்கும் என்று சொல்லிவிட்டு, ரயானின் கழுத்தில் முத்தம் கொடுத்து, படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தார். படம் பார்ப்பதற்கான விஷால், அன்ஷிதா, பெப்ஃரி மற்றும் சத்யா ஆகியோர் வந்திருந்தனர்.

மிஸ் யூ சௌந்தர்யா: இப்படி ஆண்கள் ஒருபக்கம் படம் பார்க்க சொல்ல, பிக் பாஸ் சீசன் 8 பெண் போட்டியாளர்களான ஜாக்குலின், சௌந்தர்யா,மஞ்சரி, ஆனந்தி, பவித்ரா ஜனனி ஆகியோர் வந்திருந்தனர். அங்கேயும் சௌந்தர்யா, செய்தியாளர்களிடம் எந்த மைக்கைப்பார்த்து பேசுவது, எந்த மைக்கில் பேச வேண்டும் என்று வழக்கம் போல தனது க்யூட்டான சேட்டையை செய்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், சௌந்தர்யாவின் ரசிகர்கள் மிஸ் யூ என கதறி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X