செல்லம்.. கண்ணுனு பேசியே இவ்வளவு சம்பளத்தை வாங்கிட்டாரே.. பிக் பாஸ் ரஞ்சித்தின் சம்பள விவரம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது தான் பிக் பாஸ் வீட்டில் அடிதடி தகராறு என சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று ரஞ்சித் வெளியேறினார். 75 நாட்கள் வீட்டில் இருந்த அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை இரண்டு மாத காலமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றன. அடுத்த மாதம் 23ஆம் தேதிக்குள் இந்த நிகழ்ச்சியை முடிந்துவிடும் என்பதால், இதில் டைட்டிலை வெல்லப்போவது யாரு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுதியுள்ளது. இதனால் நிகழ்ச்சியை மிகவும் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

bigg boss season 8 ranjith salary 8

பிக் பாஸ் சீசன் 8: கடந்த வாரம் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர். முத்துகுமரன் பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார்.எச்சரிக்கையை மீறி விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்சி டாஸ்க் வாரம் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். இதனால், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் முத்து மீது கோபப்பட்டனர். இதனால், முத்துக்குமார் உடைந்து அழுந்தார்.

வெளியேறினார்: இதைத்தொடர்ந்து, நாமினேஷனில் முத்துக்குமரன், தீபக், விஷால், அருண், ஜாக்குலின், பவித்ரா, ராயன், ரணவ், மஞ்சரி, அன்ஷிதா, சௌந்தர்யா, ரஞ்சித் என அனைவரும் நாமினேஷனில் இருந்தனர்.டாஸ்கில் வெற்றி பெற்றதால், ராயனுக்கு நாமினேஷன் ப்ரீ பாஸ் கிடைத்தது. இதில், அன்ஷிதா மற்றும் ரஞ்சித் இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று டேஞ்சர்ஜோனில் இருந்தனர்.இதில், குறைந்த வாக்குகளை பெற்ற ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பளம்: பிக் பாஸ் வீட்டில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் ரஞ்சித்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் வீட்டில், அவர் 75 நாட்கள் இருந்துள்ளதால், ரூ. 50 ஆயிரம் என்கிற கணக்கில் 75 நாட்களுக்கு ரஞ்சித்திற்கு ரூ. 37 லட்சம் சம்பளமாக பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரஞ்சித் வீட்டில் சிறப்பாக விளையாடவில்லை, நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அவர் 75 நாட்கள் வீட்டில் இருந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X