Bigg Boss: நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட அன்ஷிதா, ஜெப்ரி.. என்னதான் நண்பர்களா இருந்தாலும் இப்படியா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதால்,பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள், நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 24 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், தீபக், பவித்ரா, மஞ்சரி, செளந்தர்யா, ஜாக்குலின் ஆகிய 10 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பாச மழை பொழிந்தனர். இதனால், பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் பெரிதாக சண்டை எதுவும் நடைபெறவில்லை.

டைட்டில் வின்னர் யார்: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் நடுவில் பல்வேறு டாஸ்குகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தது. நடந்து முடிந்த டாஸ்குகள் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று ரயான் டிக்கெட் டு ஃபினாலே ஜெயித்து இருக்கிறார். இதன் மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த, அவர் பைனலில் முதல் ஆளாக நுழைந்து இருக்கிறார். இதனால், யார் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜெஃப்ரி வெளியேறினார். அவர் எலிமினேஷன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியே ஜெஃப்ரியின் எலிமினேஷனில் உடன்பாடு இல்லாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து கம்மியான வாக்குகளை பெற்று அன்ஷிதா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்து வெளியே வந்த ஆனந்தி, சத்யா,ஜெஃப்ரி, அன்ஷிதா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இவர்கள் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்னதான் நண்பர்களா இருந்தாலும் இப்படியா? என்று கேட்டு வருகின்றனர்.
விஷால், அன்ஷிதா காதலா: பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக இருந்து வந்த அன்ஷிதா, தர்ஷிகாவின் எவிக்ஷனுக்கு பின்னர் விஷால் உடன் ஓவர் நெருக்கமாகி, ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அப்செட் ஆன ரசிகர்கள், விஷாலை அல்லது அன்ஷிதா ஆகிய இருவரில் ஒருவரை தூக்க முடிவு செய்து அன்ஷிதாவை எலிமினேட் செய்துவிட்டனர். இதற்கு முன்னதாகவே அன்ஷிதா அர்னவுடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











