Bigg Boss 8: ரவீந்தர்,ரஞ்சித்,சௌந்தர்யா தான் டார்கெட்.. இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று அக்டோபர் பத்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ
வெளியாகி இருக்கிறது. அதில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது.
பிக் பாஸ் சீசன் 8ல், ஆண் போட்டியாளர்கள் தனியாகவும், பெண் போட்டியாளர்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால்,நேற்றை நிகழ்ச்சியில், ஆண்கள் அணியில் இருந்து நான் முத்துக்குமரன் பெண்கள் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.அதுபோல பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஜனனி ஆண்கள் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இரண்டு பிரதிநிதிகளும் மாறி மாறி வீட்டிற்குள் போவதற்கு முன்பே அடுத்து என்னென்னசெய்யலாம் என்று பிளான் போட்டுவிட்டு சென்று இருக்கின்றனர்.

போடி சொன்ன அவ்வளவு தான்: நேற்று விஜே விஷால் பவித்ராவை "டி" என்று அழைத்தால் கடுப்பான அவர் எனக்கு டி போட்டு பேசுறது பிடிக்காது. நீ போட்டு பேசாதே என்று கத்தினார். உடனே விஜே விஷால் நான் எதுவும் தப்பா பேசலையே, அப்படி பேசுவது எனக்கு பழக்கம் அதான் அப்படி வந்துவிட்டது என்று சொல்ல, அது எப்படி வரும், நான் நேற்று சமைக்கும் போதே அப்படி சொல்லாதேனு சொன்னேன் என்று காட்டுக்கத்தல் கத்தினார் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்று அருண் இருவரையும் தடுக்கிறார். ஆனாலும் பவித்ரா எனக்கு நீ டி போட்டு பேசுவது பிடிக்காது. நீ சொன்னதை நான் பண்ணணும் என்று ஒன்னும் இல்லை என்று கத்தி பேச, அதற்கு விஷால் நீ நான் உன்னை டி போட கூடாது என்று சொல்ல முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடைசியில் எல்லாமே டிராமாவா: இந்த பஞ்சாயத்து ஒரு கட்டத்தில் பெருசாக, ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் வாயா, போயா என பேசிக்கொண்டனர். பின் ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த மற்ற பெண் போட்டியாளர்கள் முயற்சி செய்தனர். மேலும் அந்த சண்டையில் கீழே விழுந்து தனக்கு கையில் அடிபட்டு விட்டது என அருண் பிரசாத் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். கடைசியில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரையும் வர வைத்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வைக்க, அப்போது தான் அவர்கள் செய்தது எல்லாமே டிராமா என்பது தெரிந்தது. அதை பார்த்து பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
இன்றைய பிரோமோ: நேற்றைய நிகழ்ச்சி சண்டை சச்சரவுடன் முடிவடைந்த நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.இதில் ரவிந்தர், இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் ரூல்ஸ் புக்கை வாசிக்கிறார். இதில், இந்த வார வந்த வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்கிறார். இதையடுத்து, வரும் விஜே விஷால், இந்த வாரம் பெண்கள் டீமில் இருந்து ஒருத்தர் போவார் என்று நினைக்கிறேன் என்றார். அடுத்ததாக பேசிய தர்ஷா, இந்த வாரம் ரவீந்தர் போவார் என்று நினைக்கிறேன். ஏன் என்றால்,விளையாட்டை ட்விஸ்ட் செய்கிறார் என்றார். இதையடுத்து, வந்த னனதீபக், ஜாக்குலின் ஒன் மேன் ஷோ மாதிரி இருக்க நினைக்கிறார் என்று அவரை நாமினேட் செய்தார். இதைத்தொடர்ந்து வந்த சத்யா, தர்ஷிதா,சுனிதா என அனைவரும் ரஞ்சித்தை நாமினேஷன் செய்தனர்.


Click it and Unblock the Notifications











