Bigg Boss 8 First Eviction: முதல்முறையாக 24 மணி நேரத்தில் முதல் எவிக்‌ஷனா?.. பிக் பாஸ் 8 பிரளயம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதியின் இந்த எதிர்பாராத அறிவிப்பு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.

இன்றைய நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, "இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது.

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேற போகும் அந்த பிரபலம் யார்? இதுக்கா இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வந்தார் என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன.

ரவீந்தர் பாவம் பாஸ் ரொம்பவே கஷ்டப்படுகிறார் அவரை முதல் ஆளாக வெளியே அனுப்பிடுங்க என்றும் ரஞ்சித்தை அனுப்பிடுங்க, அர்ணவ் வேண்டாம் என ஒவ்வொரு போட்டியாளர்கள் பெயரையும் நெட்டிசன்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதெல்லாம் செய்ய வாய்ப்பில்லை ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என்றும் போன முறை டபுள் எவிக்‌ஷன் செய்தது போல 24 மணி நேரத்தில் எவிக்‌ஷன் செய்தால் ஆட்டம் கண்டிப்பாக சூடு பிடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X