Bigg Boss season 8: அழுதுக்கிட்டே இருந்த தர்ஷா குப்தாவிற்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது. போன சீசனில் சுமால் ஹவுஸ்,பிக் ஹவுஸ் என இருந்த நிலையில் இந்த சீசனில், ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் மூன்றாவது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா வெளியேறினார். தற்போது அவர் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 6ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில்,நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், பவித்ரா, அனிஷிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மூன்று ஆண் போட்டியாளர்கள் மட்டுமே போன வாரம் நாமினேஷனில் சிக்கினர். இதில் நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி,கில்லர் காயின் டாஸ் குறித்தும், ஓட்டல் டாஸ்க் குறித்தும் போட்டியாளர்களிடம் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.

bigg boss tamil dharsha gupta salary 8

தர்ஷா குப்தா: இதில், மூன்றாவது வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்று தர்ஷா குப்தா வெளியேறி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில்,தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தாமல், வாய்ப்பு கிடைக்கல என்று கிடைத்த கேப்பில் எல்லாம் அழுது கொண்டே இருந்தார். அவரது விளையாட்டுத் திறமையும் இதில் பெரிதாக வெளியாகவில்லை என்பதே அவர் வெளியேற முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து,வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷா, விஜய்சேதுபதியிடம் பேசினார். அப்போது, இரண்டு வாரம் எனக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை. இப்போதுதான் விளையாட ஆரம்பித்தேன் அதற்குள் வெளியே அனுப்பி விட்டார்கள் என்றார்.

இவ்வளவு சம்பளமா: இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தர்ஷா குப்தா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். 20 நாட்கள் வீட்டிற்குள் தங்கி இருந்த நிலையில், தர்ஷா குப்தாவிற்கு ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட இணையவாசிகள் அழுதுக்கிட்டே இருந்த தர்ஷா குப்தாவிற்கு இவ்வளவு சம்பளமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X