காதல் ஜோடியை பிரித்த பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்.. வெளியான தகவல்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக அக்டோபர் 6ந் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப்போகிறார் என ஒரு விதமான பதற்றம் இருந்த நிலையில், மனுஷன் முதல் எபிசோடிலேயே பட்டையை கிளப்பிவிட்டார். சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்த ரவீந்தர் வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில், சுனிதா, சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் ரவீந்தர், ரஞ்சித் போட்ட பிராங்க்கால் வீடே இரண்டானது, ஆனால், இந்த வாரம் வீட்டில் அந்த அளவிற்கு பெரிய பஞ்சாயத்து எதுவும் நடக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

பிக்பாஸ்: இந்த வாரம்,கயிறு டாஸ்கில் திறமையாக செயல்பட்ட சத்யா இந்த வாரம் வீட்டின் கேப்டன் ஆனதால் அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. இதையடுத்து நடந்த இந்த வார நாமினேஷனில், ஆர் ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா என 10 பேர் சிக்கியுள்ளனர். இதில் முதல் நாளிலேயே வெளியேறிய சச்சனா விஜய்சேதுபதியின் பரிந்துரையால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதால், அவர் வெளியேற வாய்ப்பு இல்லை. இதற்கு ஏற்றார் போல, அவர் நல்ல வாக்கை பெற்று இருக்கிறார். முத்துக்குமரன் கடந்த முறையும் நாமினேஷனில் சிக்கினார். இந்த முறை அவர் நாமினேஷனில் சிக்கிய போதும், அவர் வெளியேறக்கூடாது என்று நினைக்கும் மக்கள் அவருக்கு வாக்கை குவித்து வருகின்றனர்.
வெளியேறிய போட்டியாளர்: இதில், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில், தர்ஷாவைவிட குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்னவ் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடவில்லை. அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் அவருக்கு பெரிய அளவில் நல்ல பெயர் இல்லாததால் அவரால் மக்களின் இதயத்தில் இடம் புடிக்க முடியாமல் போய்விட்டது. அர்னவ் வெளியேறிவிட்டதாக தகவல் கசிந்து வரும் நிலையில்,காதல் ஜோடியை இப்படி பிரிச்சிட்டீங்களே பிக்பாஸ் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications