Bigg Boss : தர்ஷிகா VS விஷால்.. லவ்வா இல்ல ஜவ்வா? கடுப்பாகும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் வீடு என்றாலே, அதுல கண்டிப்பா காதல் கதை இருக்கும். அப்படி தான் முதல் சீசனிலிருந்து சீசன் 7 வரைக்கும் நிறைய காதல் கதைகளை பிக் பாஸ் வீடு பார்த்து இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5ல கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி, இரண்டு பேருமே இந்நாள் வரைக்கும் நல்ல காதலர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில பிக் பாஸ் சீசன் 8ல் புதுசா ஒரு காதல் கதை உருவாகியிருக்கு, இதனால், இனிவரும் நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதுநாள் வரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதால், தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவர்கள் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது வரைக்கும் நன்றாகவே தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. அவர், எந்த விஷயத்தையும் பூசி மொழுகாமல், நேரடியாக சொல்வதால், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

bigg boss 8 vishal tharshika

பிக் பாஸ் சீசன் 8: 50-வது நாளை எட்டியிருக்கும் இந்த சீசனில் தர்ஷிகா மற்றும் விஷால் ரெண்டு பேரின் லவ் ட்ராக் ஆரம்பம் ஆகி இருக்கு. தர்ஷிகா எனக்கு விஷால் மேல ஒரு க்ரஷ் இருக்கு என்று வெளிப்படையாகவே ஆனந்தியிடம் சொல்லி இருந்தார். அது இப்போது விஷாலின் காதுக்கு சென்று விட்டது. விஷாலுக்கும், தர்ஷிகா மேல ஒரு கிரஷ் இருக்கு ஆனால், அதை யாரிடமும் சொல்லிவிடாமல் மறைத்து வருகிறார். நேற்றைய எபிசோடில், தர்ஷிகாவிடம் பேசிய விஷால் எல்லாரும் என்னிடம் வந்து உன் பெயரை சொல்லி கிண்டல் அடிக்கிறார்கள். இது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை, எதுவாக இருந்தாலும் வெளியில் போய் பார்த்து கொள்ளலாம் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்.உடனே தர்ஷிகா, ப்ரேக்கப்பா ஓகே போ என்று சொல்கிறார்.

தர்ஷிகா VS விஷால்: தர்ஷிகா, விஷால் மீது க்ரஷ் இருக்கு என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஆனால், விஷாலுக்கு தர்ஷிகா மேல, ஒரு அபிப்ராயம் இருந்தாலும் விளையாட்டுக்காக,எஸ்.ஜே. சூர்யா படத்தில் வருவது போல, ஒன்னு இருக்கு, ஆனா இல்ல என்கிறபடி பேசி வருகிறார். இதைப்பார்த்து கடுப்பான ஆடியன்ஸ், இது லவ்வா இல்ல ஜவ்வா என கடுப்பாகி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X