Bigg Boss: அர்னவும் இல்லை.. விஷாலும் இல்ல.. அவர் பெயரை சொன்னேன்.. அன்ஷிதாவின் காதலன் யார்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அதில் காதல் வராமல் இருக்குமா? பல காதலர்களை சேர்த்து வைத்திருக்கும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனிலும் தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவும் காதல் வலையில் விழுந்துள்ளனர். ஆனால், விஷால் அவர்களை காதலில் விழவைத்து காய் நகர்த்தி வெளியே அனுப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா சரியான பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் 8 சீசன் அக்டோபர் 18போட்டியாளர்களுடன் தொடங்கியது, இதில் மேலும் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்தனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில், ராயன் டிக்கெட் டூ பினாலே டிக்கெட்டை பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றுவிட்டதால், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஷால் பிளேபாய்: இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். அவர்கள் அனைவரும் விஷால் டபுள் கேம் ஆடிவிட்டதாகவும் தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவை காதல் என்ற வலையில் விழ வைத்து அவர்களை வெளியே அனுப்பி விட்டதாகவும் பேசினார்கள். குறிப்பாக, சாச்சனா, விஷாலை பிளேபாய் என்று கூறிவிட்டதால் அவர் இரவு முழுவதும் கதறி அழுது கொண்டு இருந்தார்.
எக்ஸ் காதலன்: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் கூட்டாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, தொகுப்பாளர், விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்றும், அன்று இரவு விஷாலின் காதில் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு, அவர் நான் யாரையாவது காதலிக்கிறேன் என்றால், காதில் ரகசியமாக சொல்ல மாட்டேன், சத்தமாகவே சொல்லி இருப்பேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்றார். எப்போதும் விடாத தொகுப்பாளர், விஷாலின் காதில் அர்னவின் பெயரை கூறினீர்களா? என்று கேட்டதற்கு, விஷாலும் இல்லை... அர்னவும் இல்லை... நான் என்னுடைய எக்ஸ் காதலன் பெயரை கூறினேன் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











