தந்தையை இழந்து பட்ட கஷ்டம்.. அவமானங்கள்.. பிக் பாஸ் கம்ருதீனின் கதை.. கூடா நட்பால் இதை மறந்துட்டாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் கம்ருதீன். ஹீரோ மெட்டீரியலான கம்ருதீனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பின், இவருக்கு என்று ஏராளமான பெண் ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த கம்ருதீன் எப்படி நடிகரானார் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தவர்தான் கம்ருதீன். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான கம்ருதீனின் முழுப்பெயர் கம்ருதீன் பாஷா. சென்னையில் பிறந்த இவர், பாடியில் உள்ள செட் ஜோசப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின் சவிதா இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து பிளிப்கார்ட்டில் சினியர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட, அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். ஏழ்மையான குடும்பம் என்பதால், பெரிய உறவுகள் யாரும் இல்லாமல் அம்மா, அக்கா இவர்கள் தான் உலகமே என வாழ்த்து வந்துள்ளார்.

Bigg Boss kamaruddin life story
Photo Credit:

பிக் பாஸ் கம்ருதீன்: இந்த நேரத்தில் தான் கூட நட்பாக கம்ருதீன் வாழ்க்கையில் வந்த இருவரும், நீ ரொம்ப அழகா இருக்க, நிச்சயம் சினிமாவில் உனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கம்ருதீன் மனதில் ஆசையை விதைத்துள்ளனர். மேலும், எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி, அவரிடம் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பணத்தை வாங்கி கம்ருதீனை ஏமாற்றி உள்ளனர். ஏமாந்ததை உணர்ந்த கம்ருதீன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது, கம்ருதீனின் நண்பர்கள், பெரும் முயற்சி செய்து மாதவன் என்கிற படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளனர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல வெப்தொடர்களில் கம்ருதீன் நடித்துள்ளார்.

பல அவமானங்கள்: கம்ருதீன் நடிகராக மட்டுமில்லாமல், மாடலாக இருந்து சவுத் ஐகான் விருதையும் பெற்றுள்ளார். இந்த விருதை வாங்கிய கம்ருதீன் பேருந்துக்கு கூட காசு இல்லாமல் நடந்து வந்தேன் என்று ஒரு பேட்டியில் வருத்தப்பட்டு பேசி உள்ளார். இப்படி முட்டி மோதி பல கஷ்டத்தை அனுபவித்தும் படவாய்ப்பு எதுவும் கிடைக்காததால், அம்மாவும், அக்காவும் சினிமா வேண்டாம், அடுத்த வேலையை பாரு என முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஆனால், நிச்சயம் சினிமாவில் நான் ஜெயிப்பேன் என்று நம்பிய கம்ருதீன், யூடியூபில் குறும்படத்தில் தொடர்ந்து நடித்துள்ளார். இப்படி பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் மகாநதி சீரியலில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில், கங்காவை ஒரு தலையாக காதலிக்கும் ரோலில் நடித்து வந்தார். அந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

கம்ருதீன் மறந்துவிட்டார்: மகாநதி சீரியலில் இருந்து விலகிய கமருதீன் தற்போது பிக் பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக உள்ளார். ஸ்ட்ராங்கான போட்டியாளரான கமருதீன் ஆரம்பத்தில் ஏடாகூடமாக பேசி, விஜய் சேதுபதியிடம் வாங்கி கட்டிக்கொண்டார். விஜய் சேதுபதி கண்டித்ததை அடுத்து தன்னை மாற்றிக் கொண்ட கம்ருதீன் நிதானமாக விளையாடி வந்தார். ஆனால், தற்போது பார்வதியுடன் சேர்ந்து கொண்டு, அவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவமானப்பட்டு, கஷ்டப்பட்டு படிப்படியாக இந்த இடத்திற்கு வந்து இருக்கும் கம்ருதீன், பிக் பாஸ் வீட்டிற்குள் எதற்காக வந்தோம் என்பதை மறந்துவிட்டு பார்வதியின் பின் சுற்றி பெயரை கொடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல், சினிமா வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறார். கூட நட்பு கேடாய் முடியும் என்பதை கம்ருதீன் மறந்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X