நீ ரொம்ப ஓவரா போற.. என்கிட்ட வாய் பேசாதே… பவானியை அதட்டிய நிரூப்!
சென்னை : அக்ஷ்ரா, சிபி, நிரூப், மதுமிதா, ஐக்கி, பாவ்னி, இசைவாணி, அபினய், ஸ்ருதி ஆகிய ஒன்பது பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த வாரம் நிலத்திற்கான ஆற்றல் வழங்கப்பட்டுள்ளதால் நிலத்திற்கான காயினை வைத்துள்ள நிரூப், ஹவுஸ்மெட்களை வச்சு செய்து கொண்டிருக்கிறார்.
நிரூபின், ஓவர் ஆட்டத்தால் கடுப்பான பவானி அவரிடம் நீ ரொம்ப டூ மச்சா பேசுற என்று வாக்கு வாதத்தில் ஈடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாக்குவாதம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டு இருந்த நிரூப் ஒரு கட்டத்தில் பொருமை இழந்து காட்டுத்தனமாக கத்த ஆரம்பித்தார். இதனால் பிக் பாஸ் வீடே அலறியது.

வருண் கேப்டன்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான கேப்டனாக சிபி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருடைய தலைவர் பதவியை வருண் தனது காயினை பயன்படுத்தி பறித்துக்கொண்டார். இதையடுத்து, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக வருண் இருந்து வருகிறார்.

பவானிக்கு பனிஷ்மெண்ட்
நிலத்தின் காயினை வைத்து இருக்கும் வைத்திரும் நிரூப் இந்த வாரம் முழுவதும் வீட்டை ஆளுமை செய்யலாம் என பிக் அறிவித்துள்ளதால் அவர் தொடர்ந்து தனது அட்டகாசத்தை செய்து வருகிறார். நேற்று பவானி, ஸ்ருதி, மதுமிதா பெட்ரூமிலிருந்து தாமதமாக வெளியேறியதால் அவர்களுக்கு பச்சை மிளகாய்,பாவக்காய் சாப்பிடும் பனிஷ்மெண்ட் கொடுத்தார்.

நிரூப்பிடம் சண்டை போட்ட பாவனி
இதையடுத்து இன்று, நிரூப் 5 பேரை தேர்வு செய்து வெளியில் படுக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அவர், பவானியின் பெயரை சொல்லுகிறார். இதனால் கடுப்பான பவானி ,எது சொன்னலாலும் அமைதியா இருப்பதால் என்ன வேணும்னாலும் சொல்லுவியா என்று நிரூப்பிடம் சண்டை இடுகிறார்.

டூ மச் நிரூப்
இதற்கு நிரூப், யாரும் இங்கே வேணும்னு சொல்லல பிக் பாஸ் எனக்கு பவர் கொடுத்து இருக்காரு. அந்த பவரை நான் யூஸ் பண்றேன் என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து பேசிய பவானி நீ பண்றது ரொம்ப டூ மச், இதுவரையில் வெளியில் தூங்காதவங்களை வெளியில் தூங்க சொல்லுங்க என்கிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன நிரூப், அதை நீ சொல்லாத, பவானி என்கிட்ட வாய் பேசாதே, நீ பல முறை ரூலை மீறி இருக்க என்று காட்டுத்தனமாக கத்தினார்.

சண்டை சமாதானம் ஆனது
மற்ற போட்டியாளர்கள் நிரூப்பை சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து அழுதுக்கொண்டு இருந்த பவானியிடம் வந்த நிரூப், நான் என் டாஸ்க்கைத்தான் செய்கிறேன் வேணும்னு செய்யவில்லை என்று, தனது தரப்பு விளக்கத்தை தருகிறார். இதையடுத்து இவர்களின் சண்டை சமாதானம் ஆனது.


Click it and Unblock the Notifications











