இவர பார்த்தா அம்மா பீலிங் வருது...ஹவுஸ்மெட்டுகளில் மனம் கவர்ந்த போட்டியாளர்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக அமுதவாணன் இருக்கிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சீசனில் அறிமுகம் இல்லாதவர்கள் வந்ததால்,நிகழ்ச்சி எடுபடாமல் போனதால் இந்த முறை விஜய் டிவி கவனமாக போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சீசன் அதிரடியாக ஆரம்பித்து விறுவிறுப்பாக வீட்டிற்குள் சில களோபரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழக்கமான நடக்கும் பஞ்சாயத்து நேற்று நடைபெற்றது.

சிரிக்க வைக்கிறார்

சிரிக்க வைக்கிறார்

இதில், இந்த வீட்டில் இவரைப்போல இன்னும் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கு பிளஸ் கார்டை கொடுக்க வேண்டும் என்றார். அப்போது முதல் ஆளாக எழுந்த ரச்சிதா, அமுதவாணன் அனைவரையும் எப்போதும் சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். இவரைப்போல ஒருவர் அல்ல, இன்னும் 4 பேர் வந்தாலும் வீடு மகிழ்ச்சியா இருக்கும் என்றார்.

அம்மாவைப்போல

அம்மாவைப்போல

தனலட்சுமியும் இந்த வீட்டில் அமுதவாணன் இருப்பதால் வீடு கலகலப்பாக இருக்கிறது. அதே போல ஒருநாள் நான் சாப்பிடாமல் இருந்தேன் அப்போது என்னிடம் வந்து, சாப்பிடு என்று என் அம்மாவைப் போல சொன்னார். இதனால், இவர் மீது ஒரு நல்ல மரியாதை வருகிறது என கூறி பிளஸ் கார்டை அவரிடம் கொடுத்தார்.

மனம் கவர்ந்த போட்டியாளர்

மனம் கவர்ந்த போட்டியாளர்

வீட்டில் இருந்த பெரும்பாலான போட்டியாளர்கள் அமுதவாணனுக்கே பிளஸ் கார்டை கொடுத்தனர். இதனால் நெகிழ்ந்து போன அமுதவாணன், இவர்களின் மனதில் இடம் பிடித்ததை நினைக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதாக கூறினார். இந்த வாரத்தில் மனம் கவர்ந்த போட்டியாளராக அமுதவாணன் இருக்கிறார். முதல் வாரம்என்பதால் எலிமினேஷன் இல்லை அடுத்த வாரம் முதல் கட்டாயம் எலிமினேஷன் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X