இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 7 நபர்கள்..டேஞ்சர் ஜோனில் இருப்பது யார்?
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 இரண்டு வாரங்களை கடந்து 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் அமுதவாணன், அசல் கோளாறு, ஆயிஷா, அஜீம், தனலக்ஷ்மி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், நந்தினி, நிவாஷினி, குயின்ஸி, ரச்சிதா, ராம், ராபர்ட், ஷெரினா, ஷிவின், விக்ரமன், சாந்தி, ஜி.பி. முத்து என 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் வீட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டாலும், வீட்டில் நேற்று கேப்டன் பதவிக்கான போட்டி மற்றும் நாமினேஷன் என வீடே சுறுசுறுப்பாக இருந்தது. இதில், கேப்டன் பதவிக்கு நடைபெற்ற டாஸ்கில், குயின்ஸி, மகேஸ்வரி, ஏடிகே ஆகியோர் போட்டியிட்டனர். இதில் குயின்ஸி அதிக ஓட்டுகளை பெற்று இந்த வாரத்தின் கேப்டன் ஆனார்.

நாமினேஷன் ப்ராசஸ்
இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. நேற்று தீபாவளி என்பதால், கன்ஃபெஷன் ரூமில், போட்டியாளர்களுக்கு இனிப்பு வைக்கப்பட்டு இருந்தது இது பார்ப்பதற்கு அழகாகவே இருந்தது. இதில், நிவாஷினி, நானும் அசலும் பழகுவதை ஆயிஷா தவறான பார்க்கிறார். இதனால், நான் அவரை நாமினேஷன் செய்கிறேன் என்றார்.

அசலை எனக்கு பிடிக்கவில்லை
தனலட்சுமிக்கும் அசல் கோலாருக்கும் இடையே கடந்த வாரம் போடா என்று சொன்னதில் சண்டை ஏற்பட்டது. இவர்களை கமல் சமாதானப்படுத்திய போதும் இருவரும் எலியும் பூனையுமாகவே உள்ளனர். நேற்று தனலட்சுமி , எனக்கு அசலுடன் நார்மலாக பழக முடிவில்லை என்று கூறினார். அதே போல அசலும் தனலட்சுமி பெயரை நாமினேட் செய்தார்.

இந்த நாமினேஷன் ப்ராசஸ்
இப்படி ஒருவருக்கு ஒருவர் ஏதோ ஒரு காரணத்தை கூறி நாமினேஷன் செய்து கொண்டனர். வீட்டிலிருந்து பெரும்பாலானோர் அசீம் கடந்த வாரம் நடந்து கொண்டமுறை குறித்து கூறி அவரை நாமினேட் செய்தனர். இதனால், அதிகம் பேர் நாமினேட் செய்தவராக அசீம் இருக்கிறார். இதில் இந்த வாரத்தில் அசல் கோலார், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, ரச்சிதா, எ.டி.கே, ஜனனி என 7 பேர் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளனர். இதில், டேஞ்சர் ஜோனில் அசீம் மற்றும் எ.டி.கே இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











