இவர் எதுக்கு உள்ளே வந்தாருனே தெரியல...கொளுத்திபோட்டு வேடிக்கை பார்த்த கமல் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வீட்டிற்குள் போட்டியாளர்கள் போனது முதல் சுவாரசியத்திற்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

ஜிபி முத்து ஆர்மி, ஜனனி ஆர்மி, ரச்சிதா ஆர்மி,ஆயிஷா ஆர்மிஎன ரசிகர்கள் தாங்கள் விரும்பும் பிரபலங்களை டிரெண்டாக்கி வருகின்றனர்.

வாரக்கடைசி நாளான நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் குறை, நிறைகளை கேட்டு வருகிறார்.

கொளுத்தி போட்ட கமல்

கொளுத்தி போட்ட கமல்

நேற்றைய எபிசோடில், கமல் போட்டியாளர்களிடையே சண்டையை ஏற்படுத்தும் வகையில் ஒரு கேள்வி கேட்டார். அதாவது இந்த இப்படி ஒரு நபர் இந்த ஷோவிற்கு இல்லாமலே இருந்து இருக்கலாம் என்று யாரை நினைக்கிறீர்கள் என்றும் அவருக்கு நீங்கள் மைனஸ் கார்டை கொடுக்க வேண்டும் என்று நைசாக கொளுத்திப்போட்டார். கொஞ்சம் நேரம் என்ன சொல்வது என்று தெரியாமல் அனைவரும் முழித்துக்கொண்டு இருந்தனர்.

இவர் எதுக்கு உள்ளே வந்தாரு

இவர் எதுக்கு உள்ளே வந்தாரு

இதையடுத்து, எழுந்த அமுதவாணன், விக்ரமனுக்கு மைனஸ் கார்டை கொடுத்து விட்டு, ஒரு விஷயம் சரி என்று தெரிந்தாலும் தொடர்ந்து அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் இந்த பழக்கத்தை இவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, ரச்சிதா தனலட்சுமியிடம் மைனஸ் கார்டை கொடுத்துவிட்டு, அனைவரிடத்திலும் இன்னும் நீங்கள் அதிகமாக பேசவேண்டும் என்றார். இல்லாமலே இருந்தா நல்லா இருக்கும் என்பதற்கு பதிலா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்களா என கமல் நைசா கொளுத்திப் போட்டார்.

ஷிவின் மாறனும்

ஷிவின் மாறனும்

ஜனனி ஷிவினிக்கு சிவப்பு கார்டை கொடுத்து கொடுத்து யாரிடத்திலும் அதிகம் பேசாமல், மற்றவர்களுடைய தொடர்பை பெரிதாக விரும்பாமல் இருக்கிறார். அந்த பழக்கத்தை இவர் மாற்றிக்கொள்ள வேண்டும், மற்றவர்களுடன் இவர் மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். இதனால், தனலட்சுமியின் முகம் வாடிப்போனது.

ஆறுதல் கூறிய கமல்

ஆறுதல் கூறிய கமல்

பல போட்டியாளர்களும் விக்ரமன் எதுக்கு வீட்டிற்குள் வந்தாரு என்றே தெரியவில்லை என்பதை குறிக்கும் வகையில் அனைவரும் மைனஸ் கார்டை கொடுத்தனர். இதையடுத்து,கமல் இந்த மைனஸ் கார்டு உங்களுக்கு கொடுக்க காரணம் நீங்கள் இன்னும் சிறப்பாக விளையாடத்தான் என்ற அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை அடுத்த வாரம் முதல் எலிமினேஷன் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X