90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சன், ரவீனா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா!

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களாக இருந்த ரவீனா மற்றும் நிக்சன் வெறியேறி உள்ள நிலையில் அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், கூல் சுரேஷ், எழுத்தாளர் பாவா செல்லத்துரை, விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவண விக்ரம், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, லவ் டுடே பட நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, மாயா கிருஷ்ணன், யுகேந்திரன், மணிசந்திரா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ், பூர்ணிமா ரவி, நிக்சன் ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர். இதில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறிய நிலையில், பாவா செல்லத்துரை தானாக வெளியேறினார்.

Bigg Boss season tamil 7 contestants raveena and nixon salary in bigg boss

நிகழ்ச்சி ஆரம்பம் முதல் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் அடுத்தடுத்து பஞ்சாயத்துகளை சந்தித்தது. குறிப்பாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதில், நெட்டிசன்கள் கமலை கடுமையாக விமர்சனம் செய்தனர். இணையத்தில் எல்லை மீறிப்போன விமர்சனத்தால், கடுப்பாகிப்போன கமல், குறும்படம் போட்டு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை நீங்க நான் கொடுத்தீங்க என்று விளக்கம் கொடுத்தார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டுகார்டு போட்டியாளராக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களமிறங்கினர்.

பிக் பாஸ் சீசன் 7: தற்போது. 90 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் சீசன் முடிவடைய இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கின்றன. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் இதிலிருந்து ஐந்து போட்டியாளர்கள் தான் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்பதால் இந்த டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதையடுத்து இந்த வாரம், விசித்ரா, ரவீனா, நிக்சன் என மூன்று போட்டியாளர்கள் நாமினேட் ஆன நிலையில், விசித்ரா அதிகப்படியான வாக்குகளை பெற்று ரசிகர்களால் காப்பாற்றப்பட்டார். இதில் குறைவான வாக்குகளை பெற்ற ரவீனா நேற்று வெளியேறினார். அதே போல குறைந்த வாக்குகளை பெற்ற நக்சன் வெளியேறி உள்ளார். ஆனால், அந்த எபிசோடு இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

ரவீனா, நிக்சன் சம்பளம்: பிக் பாஸ் வீட்டில் மணியுடன் ஜோடி புறாவாக சுற்றி வந்த ரவீனா வெளியேறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வீட்டில் 90 நாட்கள் வரை இருந்த ரவீனாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் ஆக மொத்தம் அவருக்கு 16 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல மற்றொரு போட்டியாளரான நிக்சனுக்கு ஒரு நாளைக்கு ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும், 90 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததற்கு மொத்தம் 11 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X