BB7: அத பத்தி அவகிட்ட பேசுனது தப்பு..ஜோவிகாவின் பேச்சால் புலம்பிய விசித்ரா..கமல் சொன்ன அதிரடி பதில்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே விசித்ராவிற்கும் ஜோதிகாவிற்கும் முட்டிக்கொண்ட விவாகாரம் குறித்து கமல் அதிரடியான விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் புது ரூல்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7: இதில், அவரவர் வாழ்க்கை குறித்தும் அவர்களின் தொழில் குறித்தும் பேசினார்கள். அப்போது,வனிதாவின் மகன் ஜோவிகா, தான் பள்ளிப்படிப்பை 8ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ படித்தாகவும் கூறினார். ஜோவிகா தான் பள்ளிப்படிப்பை தொடரவில்லை என்று கூறியதையடுத்து விசித்ரா ஒரு டிகிரா அவசியம் என்று அறிவுரை கூறினார்கள்.
விசித்ராவை விளாசிய ஜோவிகா: உடனே, ஜோவிகா, அனைவரும் படிச்சுதான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை, படிப்பினால் பலர் பாதிக்கப்படுகிறார்கள், பலர் தவறான முடிவினையும் எடுக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் விசிலடித்தால் டென்ஷனான விசித்ரா, உன் அம்மா சொல்ல மாட்டாங்களா இதெல்லாம் என்று கேட்க, என் அம்மா சொன்னா நான் கேட்டுக்கிறேன். விசித்ராவை வா போ என்று ஒருமையில் இதனால் இருவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால்,கண்கலங்கிய விசித்ரா அத பத்தி அவகிட்ட பேசுனது தப்புத்தான் என்றார்.
கமல்ஹாசன் பேச்சு: இதையடுத்து,ஆறாவது நாளான இன்று கமல்ஹாசன் வந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் முதல் வாரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசினார். அப்போது, விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே நடந்த சண்டை குறித்து இருவரிடமும் கேட்டார். அதற்கு விசித்ரா அனைவரும் டிகிரி படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அடிப்படை கல்வியாவது இருக்க வேண்டும் என்றார்.
கட்டாயம் இல்லை: இதையடுத்து பேசிய ஜோவிகா நான் படிப்பு தேவையில்லை என்று பேசவில்லை, எனக்கு வரவில்லை என்றுதான் பேசினேன். மீண்டும் அவர்கள் அதைப்பற்றி மட்டும் பேசியது எனக்கு கஷ்டமான இருந்தது. படித்துத்தான் ஒருவர் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று பேசினார்.
இருவரின் பேச்சையும் கேட்ட கமல், கல்வியை கலங்கரை விளக்காக விசித்ரா பார்க்கிறார். அவர் வசிக்கும் கேரளாவில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக அவரே இருக்கிறார். இந்த வயதில் பிஎச்டி பண்ணி இருக்காங்க என்றார்.
ஆண்டவர் சரியான தீர்ப்பு: மேலும், நான் படிக்காதவன் தான், ஆனால் இந்த வயதிலும் புத்தகங்களை தேடித் தேடி படித்து இருக்கிறேன். படிக்காமல் மேதையானவர்களும், ஜோவிகா யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்வில்லை, எனக்கு படிப்பு வரவில்லை என்றுதான் சொல்கிறார். இந்த விஷயத்தை விசித்ரா எண்ணமும் சரிதான்... ஜோவிகாவின் எண்ணமும் சரிதான் என ஆண்டவர் சரியான தீர்ப்பை சொல்லிவிட்டார்.


Click it and Unblock the Notifications











