Bigg Boss 7: இரண்டு வீடு..ஒரு வாசல்..ஆனால், அது ஒன்னுதான்.. வீட்டை சுற்றிக்காட்டிய கமல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வீட்டை கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் வந்து வீட்டை சுற்றிக்காட்டினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், அசால் கோலார், ஏ.டி.கே, தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முத்திரைப்பதித்தனர்.

bigg boss season tamil 7 launched two house but one way, one kitchen

இதில் அசீம் டைட்டிலை தட்டிச்சென்றார். இரண்டாம் இடம் விக்ரமனுக்கு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் சீசன் 6 ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், பத்து மாதம் கழித்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில், நிகழ்ச்சி தொடங்கிய போது, நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என எம்ஜிஆர் பாடலுடன் கமல்ஹாசன் படுக்கையில் இருந்து எழுந்து ரெடியாகி நிகழ்ச்சியை தொடங்கினார்.

இரு வீடு... ஒரு வாசல்: வழக்கமாக ஒரே வீட்டில் 18 போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆனால்,இந்த முறை இரண்டு வீடு என்று கூறப்பட்ட நிலையில், அதை விரிவாக விளக்குவதற்காக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் வந்து மெட்ராஸ் பாசை பேசி அசத்தினார். பின் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு விளக்கமும் கொடுத்தார். அதில் இரண்டு வீடு இருந்தாலும், ஒரே ஒரு வாசல், ஒரே ஒரு கிச்சன் தான். சமையல் அறை ஒன்றாக இருந்தால் தானே முட்டி மோதிக்கொள்வார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொண்ட பிக் பாஸ் டீம் அதை மாற்றவே இல்லை.

கண்ணை கவரும் வீடு: வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீட்டி,பாத்ரூம், படுக்கை அறை என அனைத்துமே வழக்கம் போல உள்ளது. வீட்டில் கலை வடிவம் இந்த முறையும் கண்களை கவரும் வகையில் உள்ளது. இந்த முறை சிறைக்கு பதில் சங்கிலி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X