பிக் பாஸ் சக்தியின் ‘குற்றவாளி‘… பெயரே சும்மா தரமா இருக்கே !

சென்னை : இயக்குனர் பி வாசுவின் மகனாக சக்திவாசு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது இதில் சக்தி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் சக்தியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

பி வாசு இயக்க்ததில் உருவான சின்னத்தம்பி திரைப்படத்தில் இளம் வயது பிரபுவாக சக்தி நடித்திருந்தார். மேலும், ரிக்ஷா மாமா, செந்தமிழ்பாட்டு, இது நம்ம பூமி போன்ற திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக

கதாநாயகனாக

2007ம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், நாசர், வடிவேலு,சுகன்யா என ஏராளமானோர் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில், இடம் பெற்ற அரபுநாடே அசந்து போகும் அழகியா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.

சிவலிங்காவில்

சிவலிங்காவில்

இதையடுத்து,ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும்,யுவன் யுவதி, ஏதோ என்னை செய்தாய், தற்காப்பு , சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ராகவா லாரன்ஸ் , ரித்விகா சிங் நடித்த சிவலிங்க படத்தில் ரஹீம் என்ற கதாபாத்திரத்தில் பேயாக நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 1லில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் இல்லத்தில் இருந்த அனைவரிடத்திலும் சக்தி சண்டையில் ஈடுபட்டார், இதனால் அவரை டிரிக்கர் சக்தி என மற்றவர்கள் கூறும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார். அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். ஒரு சில ஹிட் திரைப்படங்களில் நடித்து அவர் வாங்கி வைத்திருந்த நல்ல பெயரும் டேமேஜ் ஆனது.

பிக் பாஸூக்கு போயிருக்கக்கூடாது

பிக் பாஸூக்கு போயிருக்கக்கூடாது

ஒரு வித அழுத்தத்தின் காரணமாக நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால்,அங்கு எனக்கும் ஓவியாவுக்கும் பிரச்சினை உருவாகி என்னை கெட்டவனாக காட்டி விட்டார்கள். பிக்பாஸ் சென்று வந்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் வந்தது. குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்தது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். பிக்பாஸ் போயிருக்கக் கூடாது என மிக தாமதமாக தான் எனக்கு புரிந்தது. பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகுதான் என்னடா இப்படி செஞ்சிட்டோம் என்று வருத்தப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

குற்றவாளி பர்ஸ்ட் லுக்

குற்றவாளி பர்ஸ்ட் லுக்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த சக்தி தற்போது புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். குற்றவாளி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சக்தி வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சுருட்டுடன் உள்ளார். எது எப்படியோ இந்த படமாவது அவருக்கு நன்றாக அமையட்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X