கவர்ச்சி தீ மூட்டும் ஷிவானி…தண்ணீரில் வேறலெவல் ஆட்டம் !
கவர்ச்சி தீ மூட்டும் ஷிவானி...தண்ணீரில் வேறலெவல் ஆட்டம் !
சென்னை : ஷிவானி மாலத்தீவு சென்றாலும் சென்றார் தினமும் புது புது வீடியோ விதவிதமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ரணகளம் செய்து வருகிறார்.
இவரது புகழ் தற்போது மாலத்தீவு வரை சென்றுவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவர் தற்போது பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

ஏராளமான லைக்குகள்
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் குடும்பகுத்துவிளக்காக அறிமுகமான ஷிவானி தற்போது தனது ரசிகர்களை கவர்ச்சியில் ரணகளப்படுத்தி வருகிறார். இவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் வேற லெவலில் லைக்குகளை அள்ளுகின்றன.

மனங்களை வென்றார்
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, மற்றும் பகல் நிலவு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் லீட் அபிராமி மற்றும் அனுராதா என இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருந்தது.

மேலும் பிரபலமானார்
ஷிவானியை மேலும் பிரபலமடையச் செய்தது பிக் பாஸ் , பிக்பாஸில்கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க அதை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டதோடு பாலாஜிக்கு பணிவிடை செய்வதையே முழு நேர வேலையாக வீட்டுக்குள் செய்து வந்ததாக பலரும் குற்றம் சாட்டி இருக்க, நிகழ்ச்சி முடிவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.

ஹென்னா பாடலுக்கு
தற்போது ஷிவானியின் அட்டகாசம் மாலத்தீவு வரை சென்றுள்ளது. கடற்கரையில் குளியல் புகைப்படம், வீடியோ என ரசிகர்களை படு சூடேற்றி வருகிறார். தற்போது இவர் பச்சை நிற ஸ்லிவ் லெஸ் உடையில் நயன்தாராவின் ஹெலன்னா பாடலுக்கு செம்மையாக ஸ்டைலிஸ் வாக்கில் நடந்து, தண்ணீரில் நின்றபடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











