Shivani Narayanan: அந்த ஒத்தை ரோசா.. சினிமாவில் ஷிவானி நடிக்க வந்து ஒரு வருஷம் ஆகுது.. நச் பிக்ஸ்!
சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் சினிமாவில் அடியெடுத்து வைத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் தான் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன்.
கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி அழகு பொங்க சேலையில் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஷிவானி: சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட இளைஞர்களை ஏங்க வைத்தார்.
இன்ஸ்டாகிராமில் தினமும் 5 மணிக்கு ஹாட் போட்டோக்களை அடுக்கியே 2 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி இருந்த ஷிவானியின் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது 3.6 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

சினிமாவுக்கு வந்து ஒரு வருஷம்: சின்னத்திரை நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3வது மனைவியாக நடித்து கடந்த ஆண்டு இதே நாளில் சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்தார்.
அந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதி உடன் டிஎஸ்பி படத்திலும் அவரது காவல் நிலைய போலீஸ் அதிகாரியாக ஷிவானி நடித்திருந்தார். விக்ரம் படத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை குஷிப்படுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் ஷிவானி நாராயணன்.

ஜொலிக்கும் தங்கம்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழியை அப்படியே திருப்பிப் போட்டு "Some that glitters are gold" மின்னும் சில பொன்னாகவும் இருக்கலாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.
அந்த கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் நீங்க எப்பவுமே தங்கம் தான் ஷிவானி என கமெண்ட் போட்டு அவரது போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ஒத்தை ரோசா: ஷிவானியின் மின்னும் சேலை அழகை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் அவர் தலையில் உள்ள அந்த ஒத்தை ரோசா அழகோ அழகுன்னு கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஷிவானி நடிப்பில் பம்பர் படம் விரைவில் வெளியாக உள்ளது. கூடிய சீக்கிரமே ஷிவானி அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











