Shivani Narayanan: எங்கிட்டேயும் BMW கார் இருக்கு.. சேலையில் செம மாஸாக போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் சேலை அணிந்து செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள நிலையில், தனது BMW கார் அருகேயும் நின்று எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Bigg Boss Shivani Narayanan pose with her BMW Car and grabs fans attention

கடந்த வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஷிவானி நாராயணன் இந்த ஆண்டு பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: சில ஆண்டுகளாக சினிமா பக்கம் போன நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்த ஷிவானி நாராயணன் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

புதிய படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், ஷிவானி இப்படி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒதுங்கி விட்டாரா என்கிற ட்ரோல்களும் பறந்து வருகின்றன. ஆனால், ஷிவானி ரசிகர்களுக்கு அவரை தினமும் ஜாலியாக பார்ப்பதே செம ஹேப்பியான ஒன்று தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Bigg Boss Shivani Narayanan pose with her BMW Car and grabs fans attention

சிம்பிள் சேலையில்: நடிகை ஷிவானி பட்டுப்புடவை எல்லாம் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்காமல் சிம்பிளாக காபி கலர் சேலையை அணிந்து கொண்டு செம சிம்பிளாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்காக தற்போது வெளியிட்டுள்ளார்.

எல்லாமே செம க்யூட்டாக இருக்கு ஷிவானி என்றும் அழகு தேவதை என்றும் ரசிகர்கள் ஷிவானியை வர்ணித்து வருகின்றனர்.

Bigg Boss Shivani Narayanan pose with her BMW Car and grabs fans attention

BMW காரில்: ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுக்கு BMW கார்களை கலாநிதி மாறன் வழங்கி வரும் நிலையில், நடிகை ஷிவானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சொந்தமாக சம்பாதித்து வாங்கிய BMW கார் அருகே நின்று போஸ் கொடுத்த போட்டோவையும் வெளியிட்ட நிலையில், எங்கிட்டேயும் BMW கார் இருக்குன்னு சும்மா கெத்துக்காட்டுறாங்க ஷிவானி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

3.5 மில்லியன் ரசிகர்களில் இருந்து இந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வரும் ஷிவானி 3.8 மில்லியன் ஃபாலோயர்களை அதிகரித்துள்ளார். கூடிய விரைவிலே 4 மில்லியன் ஃபாலோயர்களை ரசிகராக்கி விடுவார் ஷிவானி என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X