2 வருஷம் ஆகும்.. இப்படித்தான் நான் சர்ஜரி பண்ணிக்கிட்டேன்.. பிக் பாஸ் ஷிவின் ஓபன் டாக்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிராண்ட் ஃபினாலே மேடை வரை கலக்கிய ஷிவின் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் செய்து கொண்ட சர்ஜரி குறித்து விரிவாக பேசியிருப்பது ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் முதன் முறையாக திருநங்கை போட்டியாளரை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினர்.

Bigg Boss Shivin opens up about her HRT and SRS surgery

நமீதா மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், கடைசி வரை இருந்து டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக ஒரே வாரத்தில் அவர் வாக்கவுட் செய்தார்.

நமீதா மாரிமுத்து: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு புதுமையான விஷயங்களை செய்து வருகின்றனர். திருநங்கை போட்டியாளர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதன் முறையாக பிக் பாஸ் தமிழில் நமீதா மாரிமுத்து போட்டியாளராக பங்கேற்றார். அவரது சோகக் கதையே ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

Bigg Boss Shivin opens up about her HRT and SRS surgery

ஆனால், அவர் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட ஷிவினுக்கு கடைசி வரை மக்கள் ஆதரவு கிடைத்தது.

கடைசி வரை போராடிய ஷிவின்: அசீம் ஆரம்பத்தில் இருந்தே ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கலாய்த்தாலும், அத்தனை பேரையும் சிங்கிளாக நின்று சமாளித்து கடைசி வரை போராடிய ஷிவினை பார்த்த ரசிகர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைக்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

விக்ரமன், அசீம் என அனைவருக்கும் செம டஃப் கொடுத்து வந்தார் ஷிவின். கதிர் உடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கி தனது நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்.

Bigg Boss Shivin opens up about her HRT and SRS surgery

சர்ஜரி பற்றி விரிவாக: திருநங்கைகள் செய்து கொள்ளும் HRT (Hormone Replacement Therapy) செய்து கொள்ளவே 2 ஆண்டுகள் ஆகும் என்றும் அதன் பிறகு சைக்காலஜி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்ல வேண்டும் மேலும், இம்பிளாண்ட்ஸ் செய்து கொள்வது, SRS (sex reassignment surgery) உள்ளிட்டவற்றை முறையாக செய்து கொள்ள வேண்டும் என்றும் அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டும் என்றும், அப்படி செய்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஏகப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன அதனை பின்பற்றலாம் எனக் கூறியுள்ளார்.

அரசே சிலருக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகளை செய்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் சென்று இதுபோன்ற சிகிச்சைகளை செய்துக் கொண்டால் எந்தவொரு சிக்கலும் வராது என ஷிவின் செம ஓபனாக திருநங்கைகளுக்கு தனது அறிவுரையை வழங்கி உள்ளார்.

செம பிஸி: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே ஷிவின் கடை திறப்பு விழாக்கள், சீரியல்கள் என செம பிஸியாகி விட்டார். பாரதி கண்ணம்மா முதல் சீசன் முடியும் நிலையில், பாரதி கண்ணம்மா திருமணத்துக்கு வந்திருந்தார் ஷிவின். விஜய் டிவியில் மேலும், சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X