For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆரவ் முதல் லாஸ்லியா வரை.. போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பை அள்ளித் தரும் தாராள பிரபு பிக்பாஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லதா? கெட்டதா? என்ற ஒரு கேள்வி ஒவ்வொரு சீசனிலும் எழுந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

  நானெல்லாம் பிக் பாஸே பார்க்காத ஆள் என்றும் சிலர் கூறுவதை கேட்டிருப்போம்.

  ஷார்ட் பிலிம், யூடியூப், சீரியல் போல திறமையானவர்களுக்கு சினிமா வாய்ப்புகளை பிக் பாஸ் நிகழ்ச்சியும் அள்ளி வழங்குவதால் தான் போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  பெஸ்ட் ஹனிமூனாம்.. அதையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதகளப்படுத்தும் பூனம் பாண்டே.. குவியும் வியூஸ்! பெஸ்ட் ஹனிமூனாம்.. அதையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதகளப்படுத்தும் பூனம் பாண்டே.. குவியும் வியூஸ்!

  சர்ச்சை ஷோ

  சர்ச்சை ஷோ

  பிக் பாஸ் நிகழ்ச்சியை சர்ச்சையை கிளப்பும் ஷோ என்றும் சொல்கின்றனர். காயத்ரி ரகுராம், வனிதா விஜய குமார், மீரா மிதுன், ஜூலி, ஐஸ்வர்யா தத்தா என பல போட்டியாளர்களை வைத்து அந்த நிகழ்ச்சி சர்ச்சையை கிளப்பியதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், அதையும் தாண்டி ரசிகர்களின் ஆதரவு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெருகிக் கொண்டே போவதற்கு அந்த நிகழ்ச்சியில் இருக்கும் இன்னும் பல சுவாரஸ்யங்கள் தான் காரணம்.

  மார்க்கெட் இழந்தவர்கள்

  மார்க்கெட் இழந்தவர்கள்

  சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் பட வாய்ப்புகள் குறைந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து 100 நாட்கள் வீட்டில் இருந்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் பட்டியலில் ஓவியா, ரித்விகா, ஹரிஷ் கல்யாண், கவின் என ஏகப்பட்ட பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

  ஹீரோவான ஆரவ்

  ஹீரோவான ஆரவ்

  பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டு, டைட்டில் வின்னரான ஆரவ் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் யானை தந்தங்களை கடத்தும் கதையான ராஜபீமா உள்ளிட்ட இரு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

  ரைசா வில்சன்

  ரைசா வில்சன்

  ஆரவ்வை போலவே மாடலிங் துறையில் கலக்கி வந்த ரைசா வில்சன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த பிரபலத்தால், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து கோலிவுட்டின் இளம் ஹீரோயினாக மாறிவிட்டார். விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களான தி சேஸ் மற்றும் ஆலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

  ஹரிஷ் கல்யாண் 2.0

  ஹரிஷ் கல்யாண் 2.0

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என நடிகர் ஹரிஷ் கல்யாணின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாணுக்கு அவர் நடித்த பல படங்கள் ஓடாத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர், பியார் பிரேமா காதல் படத்தில் கிடைத்த வாய்ப்பு, தாராள பிரபு வரை வேற லெவலில் அவரை உயர்த்தி உள்ளது.

  ஐஸ்வர்யா தத்தா

  ஐஸ்வர்யா தத்தா

  ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் நகுல், தினேஷ், பிந்து மாதவி நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே வெற்றியை கொடுத்தாலும், அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித் தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி), மிளிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

  யாஷிகா ஆனந்த்

  யாஷிகா ஆனந்த்

  ஐஸ்வர்யா தத்தாவை போலத்தான் நடிகை யாஷிகாவும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான ஜாம்பி படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆரவ்வின் ராஜ பீமா, மகத்தின் இவன் தான் உத்தமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  பிக் பாஸ் தர்ஷன்

  பிக் பாஸ் தர்ஷன்

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட விளம்பர மாடல் தர்ஷன், டைட்டில் வின்னராக வருவார் என்கிற அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. டைட்டிலை முகேன் ராவ் கடைசியில் தட்டிச் சென்ற நிலையில், தர்ஷனை ஹீரோவாக வைத்து ராஜ்கமல் நிறுவனம் படம் ஒன்றை தயாரிக்கும் என கமல்ஹாசனே மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எவனென்று நினைத்தாய் படத்தில் சான்ஸ் இருக்குமா?

  வேற லெவல் பிரபலம்

  வேற லெவல் பிரபலம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு அடுத்து ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது லாஸ்லியாவுக்குத்தான். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், இப்போ கோலிவுட்டின் ஹாட் இளம் ஹீரோயினாக மாற காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப், நடிகர் ஆரியுடன் ஒரு படம், இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் அறிமுக நடிகர் பூர்ணேஷ் உடன் ஒரு படம் என கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார். மேலும், ஏகப்பட்ட சொத்துக்களையும் வாங்கி உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

  கவினுக்கு கிடைத்த லிப்ட்

  கவினுக்கு கிடைத்த லிப்ட்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சினிமாவில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பது நடிகர் கவினுக்குத் தான் கச்சிதமாக பொருந்தும். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான அவர், நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்த பின்னரே பிக் பாஸுக்கு வந்தார். ஆனால், அதற்கு பிறகு கவினுக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். இப்போ பிகில் அம்ரிதா அய்யருடன் இணைந்து லிப்ட் படத்தில் நடித்துள்ள அவர், அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

  பிக் பாஸ் தமிழ் 4

  பிக் பாஸ் தமிழ் 4

  இந்த ஆண்டு இதே போல எந்த பிரபலத்துக்கு சினிமாவில் சூப்பரான எதிர் காலம் உருவாகப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். யார் அடுத்த ஆரவ், யார் அடுத்த லாஸ்லியா என்பதை காண ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். போட்டியாளர்களாக கலந்து கொண்டாலே அவர்கள் பிக் பாஸ் பிரபலம் ஆகிவிடுவார்கள்!

  English summary
  Bigg Boss show elevates contestants to Cinema stars. From Aarav to Losliya so many example on this. Some market less actors also gained fame after participate at Bigg Boss.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X