twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸிடமே திட்டு வாங்கிய அபிஷேக்.. உங்க கருத்தை கேட்கல.. மக்கள் கருத்தை சொல்லுங்கனு செம குட்டு!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி வெளியில் அப்படி கேவலமாக பேசிய அபிஷேக் ராஜாவை உள்ளே அழைத்து வந்து தினமும் வச்சி செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் கமல் சார் அபிஷேக்கை நோஸ் கட் செய்த நிலையில், வெள்ளிக் கிழமை எபிசோடில் பிக் பாஸே நறுக்கென நடு மண்டையில் ஒரு குட்டு வைத்தது போல பேசியது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

    இமான் அண்ணாச்சி குறித்து அபிஷேக் சொன்ன கருத்துக்கு தான் பிக் பாஸே இடை மறித்து இப்படி அபிஷேக்கை விளாசியது குறிப்பிடத்தக்கது.

    யாருக்கும் பிடிக்கவில்லை

    யாருக்கும் பிடிக்கவில்லை

    சினிமா பையனாக பலரது குட் புக்கில் இருந்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டி சக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பிடிக்காத நபராக இந்த சீசனில் மாறி உள்ளார். தினமும் அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்க்காமல் எந்த ஒரு பிக் பாஸ் மீம்ஸும் அபிஷேக் இல்லாத புரமோவும் வருவதில்லை.

    விளையாடு இல்லை ஓடிடு

    விளையாடு இல்லை ஓடிடு

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடு இல்லை வீட்டை விட்டு ஓடு என்கிற டாஸ்க்கையே கொடுத்து பிக் பாஸ் கொஞ்சமாவது சுவாரஸ்யத்தை கூட்ட முயற்சித்தார். அதிகமாக தூங்குபவர், ஆங்கிலத்தில் பேசுபவர், மைக்கை சரியாக மாட்டாதவர் மற்றும் நான் நானாக தான் இருக்கேன் என 4 பிரிவுகளில் ஆட்களை நாமினேட் செய்தனர்.

    மைக் மாட்டாதவர்

    மைக் மாட்டாதவர்

    ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் எனும் போர்ட் அதிக நேரம் இந்த பிக் பாஸ் வீட்டில் மைக்கை சரியாக மாட்டாதவரான அபிஷேக்கின் கழுத்தில் மாட்டப்பட்டது. பிரியங்காவும் அடிக்கடி மைக் மாட்டாமல் பிக் பாஸிடம் திட்டு வாங்கி கட்டி வந்த நிலையில், இந்த போர்ட் அபிஷேக்கிற்கு சென்றது.

    பிக் பாஸ்க்கே தமிழ் தெரியல

    பிக் பாஸ்க்கே தமிழ் தெரியல

    பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் தமிழில் பேசாமல் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி வரும் நிலையில், அதிக அளவில் தமிழில் பேசாத நபராக அபிநய் தேர்வு செய்யப்பட்டு அவரது கழுத்தில் "Basically I Know (தமில்) யா எனும் வாசகம் மாட்டப்பட்டது. அந்த வாசகத்திலேயே தமிழ் என்று இல்லாமல் தமில் என எழுதப்பட்டது பிக் பாஸ் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பிக் பாஸுக்கே தமிழ் தெரியல என விளாசி வருகின்றனர்.

    சிக்கிய சுருதி, ஐக்கி

    சிக்கிய சுருதி, ஐக்கி

    நான் நானாகத்தான் இருக்கேன் என சொல்லிக் கொண்டு இந்த வீட்டில் ஒண்ணுமே பண்ணாம சும்மா பொழுதை கழிக்கும் இருவர் யார் என்கிற கேள்விக்கு சுருதி மற்றும் ஐக்கி பெர்ரி பெயர்கள் இடம் பெற இருவருக்கும் அந்த போர்டை மாட்டி கையில் விலங்கையும் போட்டு விட்டனர்.

    பகலினில் தூக்கம்

    பகலினில் தூக்கம்

    இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என இந்த பிக் பாஸ் வீட்டில் யார் அதிக நேரம் பகலில் தூங்குகின்றனர் என்கிற போர்ட் பிரியங்கா மற்றும் நிரூப்புக்கு சென்று சேர்ந்தது. இருவரும் அதனை ஜாலியாக மாட்டிக் கொண்டு ஹேப்பியாக சுற்றித் திரிய ஆரம்பித்தனர்.

    நடுமண்டையில குட்டு

    நடுமண்டையில குட்டு

    இதில், அபிஷேக் ராஜா இமான் அண்ணாச்சி காமெடி தனக்கு பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை என அண்ணாச்சியின் பெயரை நான் நானாதான் இருக்கேன் பிரிவில் பரிந்துரைக்க நினைக்க உடனே இடை மறித்த பிக் பாஸ் மக்களின் கருத்தை சொல்லுங்க உங்களோட கருத்து வேண்டாம் என நடு மண்டையிலேயே ஒரு குட்டு வைத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதன் ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss slams Abishek Raja after he chose Imman Annachi name for the punishment in today’s Vilayadu illana Veliyila Odu task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X