மகிழ்ச்சியாக வாழ இது போதாதா? சினேகனின் செயலால் நெகிழ்ந்த கன்னிகா!

சென்னை: பாடலாசிரியரான சினேகன், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது கன்னிகாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், சினேகன் கன்னிகாவிற்கு பணிவிடை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடலாராசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

snehan kannika snehan

கவிஞர் சினேகன்: திரைக்கு பின்னால் மட்டுமே ஜொலித்துக்கொண்டு இருந்த சினேகனை விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடிய போதும், கட்டிப்புடி சினேகன் என இணையவாசிகள் இவரை ட்ரோல் செய்யும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாகி 2வது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து, இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உயர்திரு 420 திரைப்படத்திலும் கதாநாயகனாக அவதாரமெடுத்தார்.

பாடலாசிரியர், நடிகரை தாட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய சினேகன், 2019-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது சினேகன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சினேகன், 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல் தாலி எடுத்து கொடுக்க பெற்றோரின் முன்னிலையில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது,கன்னிகா கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி கால்களை பிடித்துவிட்டு பணிவிடை செய்து கவனித்துக்கொள்கிறார். அந்த வீடியோ சினேகன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X