18 வருஷத்திற்கு பின் தாடியை எடுத்த சினேகன்.. போயா போ.. கதவை மூடி வெளியில் விரட்டிய கன்னிகா!
சென்னை: தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறியப்பட்டவர் சினேகன், இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைபிரியாத க்யூட் ஜோடியாக இருக்கிறார்கள். எப்போதும் தாடியுடன் காணப்படும் சினேகன், தாடி எடுத்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாராசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நூற்றக்கணக்கான பாடல்களை சினேகன் எழுதி உள்ள சினேகன், இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

கவிஞர் சினேகன்: திரைக்கு பின்னால் பல வெற்றி பாடல்களை எழுதி வந்த சினேகன், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இவர் பிக் பாஸ் சீசன் 1ல் ரன்னர் அப்பாகி 2வது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து, இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உயர்திரு 420 திரைப்படத்திலும் கதாநாயகனாக அவதாரமெடுத்தார். பின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய சினேகன், 2019-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
10 வருட காதல்: பன்முகக் கலைஞரான சினேகன், 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். கடந்த வாரம் கன்னிகாவின் பிறந்த நாளுக்கு சினேகன் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தி இருந்தார்.
போயா போ: தற்போது, கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சினேகன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் தாடியை எடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இத்தனை ஆண்டுகளாக தாடியிலேயே அவரைப் பார்த்து வந்த கன்னிகா, கண்ணை மூடிக்கொண்டு போயா... போயா என கதவை மூடி வெளியில் விரட்டுகிறார். இருவரின் இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











