twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்பா.. அப்படியே ஜோக்கராவே மாறிட்டாரே.. பிக் பாஸ் பிரபலத்தின் திடீர் கெட்டப் சேஞ்ச்.. ஏன் இப்படி?

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார் சோமசேகர்.

    வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சி ஏகப்பட்ட காரசாரமான காட்சிகளுடன் அரங்கேற காத்திருக்கிறது.

    இந்நிலையில், அந்த ஷோவுக்காக பேட்மேன் வில்லன் ஜோக்கராகவே சோமசேகர் மாறியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. பிக் பாஸ் தமிழ் 5ல் களமிறங்கப்போறது இவர் தானாம்!கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. பிக் பாஸ் தமிழ் 5ல் களமிறங்கப்போறது இவர் தானாம்!

    பிக் பாஸ் சோம்

    பிக் பாஸ் சோம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய சோமசேகர் பல ஆண்டுகளாக மீடியா வெளிச்சம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.

    வேர்க்கடலை சாப்பிடுறாரு

    வேர்க்கடலை சாப்பிடுறாரு

    சோமசேகர் அனைவரிடமும் நல்ல நட்பை பிக் பாஸ் வீட்டில் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் முதல் ஆளாய் நுழையும் என்ட்ரி டிக்கெட்டையும் அவர் வென்றார். சும்மா சண்டை போடாமல், வேர்க்கடலை சாப்பிட்டுக்கிட்டே டைட்டில் வாங்கிடுவாங்கன்னு சோமை குறை கூறும் விதமாக பாலா பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

    மீண்டும் விஜய் டிவி

    மீண்டும் விஜய் டிவி

    சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த சோமசேகர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.

    ஷிவானி ஜோடி

    ஷிவானி ஜோடி

    பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் சோமசேகருக்கு ஷிவானி நாராயணன் தான் ஜோடியாக நடனமாடி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் பாலாவுடன் சுற்றித் திரிந்த ஷிவானியும், ரம்யா பாண்டியனுக்கு நூல் விட்டு வந்த சோமும் பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் சேர்ந்து ஆடி வருகின்றனர்.

    ஜோக்கர் கெட்டப்

    ஜோக்கர் கெட்டப்

    இந்நிலையில், வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் ஜோக்கர் கெட்டப் போட்டுக் கொண்டு சோமசேகர் நடனமாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

    நகுலுடன்

    நகுலுடன்

    பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வரும் நகுலும் சோமசேகருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இவருக்கு ஜோடியாக ஆடப் போகும் ஷிவானி எந்த கோலத்தில் வரப் போகிறார் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்.

    சம்பவம் இருக்கு

    சம்பவம் இருக்கு

    வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணமான எபிசோடு வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா விஜயகுமார் இடையே வெடித்த மோதலையும் ப்ரோமோவாக போட்டு விஜய் டிவி டிஆர்பியை அதிகரிக்கும் வேலையை இப்பவே ஆரம்பித்து விட்டது.

    English summary
    Bigg Boss Tamil 4 contestant Somshekar’s Joker getup for Bigg Boss Jodigal photos goes viral in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X