பாலா படத்தில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்... யார் தெரியுமா?
இயக்குநர் பாலாவின் வர்மா படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ரைசாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை: இயக்குநர் பாலாவின் வர்மா படத்தில் 'பிக்பாஸ்' புகழ் ரைசாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குகிறார் இயக்குநர் பாலா. வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்காலி பெண் மேகா நடிக்கிறார்.
காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வர்மா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் புகழ்:
இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். பிக் பாஸ் மூலம் பிரபலமான மேக்கப் நாயகி ரைசா தான் அவர்.

நடுநிலையான போட்டியாளர் :
காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வர்மா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பியார் பிரேமா காதல் :
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, சினிமா மற்றும் விளம்பரப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரைசா. ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்த ரைசா, தற்போது ஹரீஸ் கல்யாணுடன் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்துள்ளார். ஹரீஸும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடலுக்கு நடனம்:
இந்த சூழ்நிலையில் தான் வர்மா படத்தில் ரைசாவும் இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இப்படத்தில் அவர், ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











