புதுப்பொண்ணு இந்திரஜாவுக்கு விருந்து கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. ஒரே முத்த மழை தான் போங்க!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், அதை விட தடபுடலாக மதுரையில் கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மதுரையில் உள்ள ஜேபி மகாலில் நடைபெற்ற திருமணத்துக்கும் அதன் முதல் நாள் இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்ளப் போவது குறித்து மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் கூறியிருந்தனர். தற்போது புதுமண தம்பதியினருக்கு பிக் பாஸ் பிரபலமான சுஜா வருணி வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். விருந்து முடித்த பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
பிகில் பாண்டியம்மா: அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், அமிர்தா அய்யர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து இந்திரஜா சங்கர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்த விருமன் படத்தில் அவருக்கு தோழியாகவும் நடித்தார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இந்திரஜா பிக் பாஸுக்கு வருவார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திருமணம் செய்துக் கொண்டார்.

கல்யாண விருந்து: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சுஜா வருணி தனது வீட்டுக்கு இந்திரஜா மற்றும் கார்த்திக்கை அழைத்து இரவு நேரத்தில் விருந்து கொடுத்துள்ளார். விருந்து சாப்பிட்ட இந்திரஜா சங்கர் அந்த வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, உங்க வீட்டு சாப்பாடு சூப்பர் அக்கா, எனக்கு இப்படியொரு சொந்தம் கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முத்தமும் மழையும்: சுஜா வருணி மற்றும் சுஜா வருணியின் கணவர் சிவா இருவருமே சேர்ந்துக் கொண்டு இந்திரஜா சங்கருக்கு முத்த மழை பொழிந்து விட்டனர். இரவு டின்னர் முடிந்ததுமே கொஞ்சம் மழை பெய்தது தங்களை ஆசிர்வாதம் செய்தது போலவே இருந்தது என இந்திரஜா சங்கர் பதிவிட்டு செம க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஒரே கொண்டாட்டம் தான்: பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்திரஜா சங்கருக்கு ஒரே கொண்டாட்டம் தான். மார்ச் மாதம் திருமணம், ஹனிமூன், மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை ஜோடி என அடுத்தடுத்து ஹேப்பி மூடிலேயே இருந்து வரும் இந்திரஜா சங்கருக்கு சில பிரபலங்களும் வீட்டுக்கு அழைத்து விருந்துக் கொடுத்து வருகின்றனர். சீக்கிரமே 5வது மாசம், 7ம் மாசம், வளைகாப்பு, குழந்தை பேறு என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும் இந்திராஜாவுக்கு நடக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். குழந்தையை பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்ட மாட்டோம் என்றும் இரு வீட்டாரும் ரொம்பவே எதிர்பார்க்கின்றனர் என்றும் இந்திரஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











