twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓவர் நைட்டில் ஹீரோவான சுரேஷ் சக்கரவர்த்தி..யூ ஆர் கிரேட் சார் என பாராட்டும் ரசிகர்கள் !

    |

    சென்னை : கடுகடுப்பான பேச்சு, டெரரான முகபாவனை, தந்திரமான செயல்கள் என இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தியை வில்லனாக பார்த்து வந்த பிக் பாஸ் ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

    பல்வேறு திருப்பங்களுடன் நாளுக்குநாள் சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே போகும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதிரடியான டாஸ்க்களின் மூலம் அனைவரையும் மிரளவைத்து வருகிறது.

    பலரும் கேப்ரில்லாவுக்கு ஆதரவு கொடுக்காத நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனியாளாக நின்று கேப்ரில்லாவை வெற்றி பெற வைக்க எடுத்த முயற்சி பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    பார்த்து கழண்டுட போகுது.. பியூமியை பார்த்து பதறும் பசங்க.. சும்மா செதற விடுறாரே தலைவி!பார்த்து கழண்டுட போகுது.. பியூமியை பார்த்து பதறும் பசங்க.. சும்மா செதற விடுறாரே தலைவி!

    சண்டையிட்டு சர்ச்சைகளில்

    சண்டையிட்டு சர்ச்சைகளில்

    பிக்பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களில் முதலில் அனிதாவுடன் சண்டை தொடங்கிய சுரேஷ், பின் ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரிடத்திலும் சண்டை போட்டு வனிதாவை மிஞ்சி விட்டார் என்ற பெயரை எடுத்தார்.

    சண்டையிட்டு வருவதை

    சண்டையிட்டு வருவதை

    சமையல் கலை வல்லுநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு முகங்களை கொண்டுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் தொடங்கிய நாள் முதலே பல போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வில்லனாக பார்க்க

    வில்லனாக பார்க்க

    அனிதாவிடம் தொடங்கிய இவரது சண்டை மெல்ல மெல்ல நகர்ந்து சனம் ஷெட்டி, ரேகா, ஆஜீத், ரியோ ராஜ் என ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் இவர் தினந்தோறும் சண்டையிட்டதார் பலரும் இவரிடன் வாய் கொடுக்காமல் தப்பிப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அனைவரின் கண்களுக்கும் இவர் வில்லனாகவே தெரிந்தார்.

    தனியாளாக சிங்கம்போல

    தனியாளாக சிங்கம்போல

    இந்நிலையில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் கேப்ரில்லா, ரியோ ராஜ், வேல்முருகன் என மூவரும் கலந்துகொள்ள பிக் பாஸ் இந்த மூவருக்கு யாரெல்லாம் ஆதரவு தருகிறீர்கள் என கேட்க கேப்ரில்லாவுக்கு யாரும் ஆதரவு தராத நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி தனியாளாக சிங்கம்போல களத்தில் இறங்கி கேப்ரில்லாவுக்கு உறுதுணையாக நின்றார்.

    அதிக நேரம்

    அதிக நேரம்

    அதிக நேரம் போட்டியாளர்களை முதுகில் தூக்கிக் கொண்டு நிற்கவேண்டும் என்ற கடுமையான டாஸ்க்கில் ரியோவை பாலாஜி முருகதாஸ் தூக்கிக் கொண்டு நிற்க, ஆரி வேல்முருகனை தூக்கி நிற்க இவர்களுக்கு உறுதுணையாக இதர ஹவுஸ் மேட்ஸ்களும் நின்று கொண்டிருந்தனர்.

    கேப்ரில்லா வெற்றிபெற

    கேப்ரில்லா வெற்றிபெற

    கேப்ரில்லாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவு தர ஏற்கனவே, முதுகுவலியால் தவித்துக்கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் கேப்ரில்லா வெற்றி பெற வேண்டும் என தனது முதுகில் சுமந்து கொண்டு வியர்த்து விறுவிறுக்க வலிகளை தாங்கிக் கொண்டு சில மணி நேரம் நிற்க இதை பார்த்த பார்வையாளர்களுக்கும் கண் கலங்கினர்.

    பாசப்போராட்டம்

    பாசப்போராட்டம்

    தன்னை முதுகில் சுமந்து கொண்டு வலியால் தவித்துக்கொண்டிருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி படும் வேதனையை புரிந்துக் கொண்ட கேப்ரில்லா போட்டியின் பாதியிலேயே சுரேஷின் முதுகில் இருந்து கீழே இறங்க, இருவருக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    ஹீரோவாக கொண்டாடி

    ஹீரோவாக கொண்டாடி

    தனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கேப்ரில்லாவுக்கு பலரும் ஆதரவு அளிக்காத நிலையில், மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தனியாளாக கடைசி வரையில் கேப்ரில்லாவுக்காக நின்று போராடிய சுரேஷ் சக்கரவர்த்தியின் இந்த ஈடு இணையற்ற செயலைப் பாராட்டி சமூகவலைதளங்களில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தியை வில்லனாக பார்த்து வந்த பலரும் இப்பொழுது ஓவர் நைட்டில் ஹீரோவாக கொண்டாடி யூ ஆர் கிரேட் சுரேஷ் சார் என புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Suresh Chakravarthy Support Gabriella
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X