கஸ்தூரி கக்கூஸ்ல கெட்ட வார்த்தை எழுதிட்டு போறவங்க லிஸ்ட்.. மோசமாக விமர்சித்த முன்னாள் போட்டியாளர்!

பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரியின் நடவடிக்கைகள் பற்றி நடிகர் டேனி விமர்சித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : கஸ்தூரியிடம் மல்லுக்கட்டும் வனிதா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்து எதையும் தீர்மானிக்க முடியாது. அதற்கு நல்ல உதாரணம் பொட்டிப் பாம்பாய் மாறிய கஸ்தூரி தான் என அந்நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான டேனி கூறியுள்ளார்.

கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டாக் ஆப் தி டவுனே பிக் பாஸ் நிகழ்ச்சி தான். முந்தைய இரண்டு சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை மேலும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. வாரம் ஒரு பரபரப்பான கண்டெண்ட்டைக் கொடுத்து அசத்தி வருகிறார் பிக் பாஸ்.

நிஜமாகவே வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதில்லை. ஆனால், ஒரு மணி நேர எபிசோட் மூலம் ஒவ்வொரு போட்டியாளருக்குமான அடையாளங்களை மக்கள் மனதில் விதவிதமாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார் பிக் பாஸ்.

டேனி பேட்டி

டேனி பேட்டி

ஆனால், வெளியில் இருந்து பார்ப்பதற்கும், நிஜமாகவே பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள் முன்னாள் போட்டியாளர்கள். அப்படியாக பிக் பாஸ் 2வது சீசன் போட்டியாளரான டேனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், வைல்ட் கார்ட்டில் உள்ளே சென்றிருக்கும் கஸ்தூரி பற்றி பல விசயங்களைப் பேசி இருக்கிறார்.

கஸ்தூரியே உதாரணம்

கஸ்தூரியே உதாரணம்

"பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இதை இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம். இது எல்லாம் ஸ்க்ரிப்ட் என்று கூறுபவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் தான் தெரியும். அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் கஸ்தூரி தான். வெளியிலிருந்த வரை டிவிட்டரில் படு பயங்கரமாக டிவீட் போட்டு வந்தார்.

வெட்டி பந்தா

வெட்டி பந்தா

ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு நாளில் அவரை சிறையில் உட்கார வைத்து விட்டனர். கஸ்தூரி போன்ற ஆட்கள் எல்லாம் எப்படி தெரியுமா இந்த பிடிக்காதவர்களை எல்லாம் கக்கூசில் கெட்ட வார்த்தையில் எழுதி வைத்து விட்டு செல்வார்களே அவர்களைப் போல தான். சும்மா வெளியில் வேண்டுமானால் பந்தா காண்பித்துக் கொள்வார்கள். ஆனால், உள்ளே ஒன்றுமே கிடையாது வெறும் புஸ்ஸு தான்" என டேனி கூறியிருக்கிறார்.

மதுமிதா காயம்

மதுமிதா காயம்

சமீபத்தில் கையை அறுத்துக் கொண்டு வெளியில் சென்ற மதுமிதாவை, நேரில் சென்று சந்தித்துள்ளார் டேனி. அப்போது அக்ரிமெண்ட்டில் உள்ளதால் நிறைய விசயங்களை மது அவரிடம் பேசவில்லையாம். ஆனால், மதுமிதாவின் கையில் உள்ள காயத்தைப் பார்த்து தான் மிகவும் வேதனைப் பட்டதாக டேனி இப்பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X