வாவ்.. விஜய் சேதுபதியை இயக்கும் சேரன்.. ஜனவரியில் ஷூட்டிங்.. பிக் பாஸில் குட் நியூஸ் சொன்ன கமல்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியே வந்தவுடன், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளார்.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியே வந்தவுடன், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் இயக்குனர் சேரன். அவரை சுற்றியே பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் பின்னப்பட்டு வருகின்றன. சரவணன் சண்டை போட்டது, மீரா மிதுன் பழி சுமத்தியது, லாஸ்லியா அசிங்கப்படுத்தியது என இந்த சீசனின் ஹாட் போட்டியாளராக இருக்கிறார் சேரன்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ் திரையுலகினர், சேரன் அவமானப்படுவது தாங்க முடியாமல், அவரை அத்துமீறி தூக்கி வர வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி தான் காரணம்

விஜய் சேதுபதி தான் காரணம்

பிக் பாஸ் வீட்டிற்கு தன்னை அனுப்பி வைத்தது விஜய் சேதுபதி தான் என ஒரு எபிசோடில் சேரன் கூறினார். அதனை சுட்டிக்காட்டி, விஜய் சேதுபதி சேரனை வெளியே அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தினர். தேசிய விருது வாங்கிய இயக்குநரை இப்படி அவமானப்படுத்தக் கூடாது என்பதே அவர்களது கோரிக்கை.

சேரனின் குரு

சேரனின் குரு

இதற்கு சேரனின் குருவான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து கடந்த வாரம் பதிலளித்தார் கமல். சேரன் இஷ்டப்பட்டு தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருப்பதாகவும், அவரை யாரும் காப்பாற்ற தேவையில்லை எனவும் அப்போது அவர் பதிலடி கொடுத்தார்.

அடுத்த படம்

அடுத்த படம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் கடைசியாக இயக்கிய படம் திருமணம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் சேதுபதியை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சேரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் சேரன்.

சேரனின் கம்பேக்

சேரனின் கம்பேக்

கமல் முன்னிலையில் பிக்பாஸ் அரங்கத்தில் இருந்த ரசிகர் ஒருவர் "நீங்கள் வெளியில் வந்த பிறகு சினிமாவில் உங்கள் கம்பேக் எப்படி இருக்கும்?" என சேரனிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சேரன், "ஜனவரியில் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் துவங்குகிறது" என குறிப்பிட்டார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சேரனின் இந்த பதில் மூலம் விஜய் சேதுபதியுடன் அவர் இணையும் படம் ஜனவரியில் தொடங்கும் என தெரியவந்துள்ளது. இதனை சேரன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை அப்படத்தில் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X