Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் அந்த போட்டியாளர் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று பிக் பாஸிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். 100 நாட்கள் கான்செப்ட் தேட வேண்டாமே.
இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் 3: போனதடவை அனந்த் வைத்தியநாதன்.. இந்த தடவை 'இசை' யாரு தெரியுமா?தடவை 'இசை' யாரு தெரியுமா?
மோகன் வைத்யா
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் இசைக்கலைஞரும், நடிகருமான மோகன் வைத்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வயதான போட்டியாளர்
கடந்த சீசனில் சீனியரான அனந்த் வைத்தியநாதனை அழைத்து வந்து எங்களை கடுப்பேற்றியது போதாதா? எப்பொழுது எலிமினேட் ஆவோம் என்று அவர் காத்திருந்தார். வயதாகிவிட்டது என்று கூறி எந்த டாஸ்கையும் சரியாக செய்யவில்லை. இந்நிலையில் மோகன் வைத்யாவை அழைத்து வந்தால் அவரும் அப்படி தான் சொல்வார். பிக் பாஸ் ஆளை மாத்துங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ்
விஜய் தொலைக்காட்சி பிரபலமான மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்கு வர ஆவலாக உள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். கடந்த சீசனில் விஜயலட்சுமியை சீரியலில் இருந்து அழைத்து வந்தது போன்று இம்முறை மைனா வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
|
வில்லன்
வயதான காமெடியன், வில்லன் ஆகியோரை தயவு செய்து பிக் பாஸ் போட்டியாளர் ஆக்காதீர்கள். அவர்களால் டாஸ்க் செய்ய முடியாது. அதே போன்று கணவன், மனைவிக்கு பதிலாக யாராவது காதல் ஜோடியை அழைத்து வந்தால் எங்களுக்கு பொழுதுபோகும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த சீசனில் யார் காதல் அந்து போகப் போகிறதோ, யாருக்கு காதல் வரப் போகிறதோ என்று பேசத் துவங்கிவிட்டனர். ரசிகர்கள் பிக் பாஸிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றை தான். தமிழ் தெரிந்த போட்டியாளர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அது நிறைவேறுமா?. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 5 நாட்களே உள்ளது என்று கூறி புதிய ப்ரொமோ வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.