பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கஸ்தூரி வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Elimination : இந்த வாரம் யாரும் வெளியேறமாட்டார்களா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியேற்றப்பட்டது குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் 17வது போட்டியாளராக வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்தார் நடிகை கஸ்தூரி. அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. வெளியில் இருப்பதை போலவே உள்ளேயும் நடந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதை எல்லாம் புஸ்ஸாக்கினார் கஸ்தூரி. பெரிதாக எந்த பிரச்சினையும் செய்யவில்லை. அபி - முகென் விவகாரத்தில் நடுவர் போல் செயல்பட்டது, நான்கு பெண்கள் விவகாரத்தை குறிப்பிட்டு கவினை வம்புக்கு இழுத்தது, வனிதாவை வாத்து என கேலி செய்தது ஆகியன மட்டுமே கஸ்தூரி செய்த பெரிய பிரச்சினைகள்.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு அவர் எந்த வகையிலும் உதவியாக இல்லை என கூறப்பட்டது. மக்களிடமும் இதே விமர்சனமே இருந்தது. இதனால், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 17 நாட்களில் கஸ்தூரி வெளியேற்றப் பட்டிருக்கிறார். சீக்ரெட் அறைக்கு போக முடியுமா என கமல் கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை.

செம கலாய்

செம கலாய்

வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி கஸ்தூரி தான் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வந்தார். தற்போது அவருடைய செயல்பாடுகள் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றில் மரணபங்கமாய் கஸ்தூரியைக் கலாய்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

பொன்னான வாய்ப்பு

"இந்தம்மா ஏன் பிக்பாஸ் உள்ள போச்சு, உள்ள போய் என்ன பன்னுச்சு. சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டார்" என இந்த ரசிகர் ஆதங்கப்பட்டுள்ளார்.

இசக்கி ஹேப்பி

நடிகை கஸ்தூரியின் மிக தீவிரமான ரசிகர் இசக்கி. கஸ்தூரியை டிவிட்டரில் பின்தொடர்கிறவர்களில் மிக முக்கயமானவரும் இசக்கி தான். எனவே அவரை கேலி செய்யும் வகையில், "கஸ்தூரி வெளிய போனால் இசக்கி ஹேப்பி அண்ணாச்சி", என இவர் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் புலி

"இந்தம்மா வெளியில டிவிட்டர் புலி பிக் பாஸ் வீட்டுல எலி" என இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சொல்வது நூறு சதவீதம் உண்மை தான். டிவிட்டரில் புலி மாதிரி பாய்ந்த கஸ்தூரி, பிக் பாஸ் வீட்டில் எலி மாதிரி தான் இருந்தார்.

எரிச்சல்

"கஸ்தூரி வெளியே இருக்கும் போது இருந்த வாய் வேற. இப்ப உள்ள இருக்கும்போது இருக்கற வாய் வேற. மொத்தமும் டம்மி தான். நகைச்சுவைனு நெனச்சிட்டு அதுவே சொல்லிட்டு அதுவே சிரிச்சிகிறதும். எரிச்சல்", என கஸ்தூரியை கடுமையாக விமர்சித்துள்ளார் இவர்.

ஏமாற்றம்

கஸ்தூரி பாவம். தூள் பறத்தனும்னு நினைச்சு வந்துச்சு. தூள்தூளாக்கி அனுப்பிட்டானுங்க' என வேதனைப் பட்டுள்ளார் இந்த ரசிகர். டிவிட்டரில் மற்ற போட்டியாளர்கள் பற்றி கிழி கிழியென விமர்சித்த கஸ்தூரியை, உள்ளே காமெடி பீஸாக்கி விட்டார்களே என்ற ஆதங்கம் பலருக்கும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X