அந்தாளே வேணாம்கிறோம், இதில் இந்தம்மா வேறயா?: குமுறும் பிக் பாஸ் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நாங்க அந்த ஆளே வேண்டாம் என்கிறோம் இதில் நீங்க இந்தம்மாவை வேறு அழைத்து வருகிறீர்களா என்று பிக் பாஸ் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார், யார் என்பது இன்று இரவு 8 மணிக்குத் தான் தெரிய வரும்.
இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதா, மோகன் வைத்யாவை அடுத்து பாடகர் முகேன் ராவ் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
கமல் ஹாஸன்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு துவங்க உள்ள நிலையில் புதிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவுக்கு இந்த சீசன் இருக்கும் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமலின் கெட்டப்பை பார்த்தாலே ஒரு வில்லத்தனமாக இருக்கிறதே என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ரசிகர்கள்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்குவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சண்டை, காதல், கோபம், முத்தம், கட்டிப்பிடி வைத்தியம், டாஸ்க்குகள் என்று வகை வகையாக வேடிக்கை இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாத்திமா பாபு
கடந்த சீசனில் கலந்து கொண்ட ஆனந்த் வைத்யநாதனால் வயோதிகம் காரணமாக எந்த டாஸ்கையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மோகன் வைத்யாவை போட்டியாளர் ஆக்கியிருக்கிறார்களே என்று புலம்பிய ரசிகர்கள் பாத்திமா பாபுவும் ஒரு போட்டியாளர் என்று சமூக வலைதளங்களில் வெளியான தகவலை பார்த்து நொந்து போயுள்ளனர். பாத்திமா பாபுவால் எப்படி டாஸ்க் செய்ய முடியும். எனக்கு வயதாகிவிட்டது, மூச்சு வாங்கும், ஆளை விடுங்க என்று அல்லவா அந்தம்மா சொல்வார் என பிக் பாஸ் ரசிகர்கள் குமுறுகிறார்கள்.

மொக்கை பீஸ்கள்
ஏன் பிக் பாஸ் இப்படி வயதானவர்களாக பார்த்து தேர்வு செய்கிறீர்கள். அவர்களால் டாஸ்க் எதையும் செய்ய முடியாது. மேலும் எப்பொழுது எலிமினேட் ஆவோம் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஏன்யா பிக் பாஸ் இப்படி எங்களை சோதிக்காதய்யா என்கிறார்கள் நெட்டிசன்கள். இதற்கிடையே மீம்ஸ் கிரியேட்டர்களோ, யார் வந்தால் எங்களுக்கு என்ன, எங்களுக்கு 100 நாட்களுக்கு கான்செப்ட் கிடைச்சாச்சுடோய் என்று கொண்டாட்டமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











