Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கஸ்தூரிக்கு கட்டம் சரியில்ல.. வனிதாவையே வம்புக்கு இழுக்குறாங்களே.. பாவம் சேரன் வழக்கம்போல அதே அதே!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு டாஸ்க்கில் வனிதாவை வாத்து என அழைக்கிறார் கஸ்தூரி.
Recommended Video
சென்னை: வனிதாவை கஸ்தூரி வாத்து என அழைத்து வாண்டடாக பிரச்சினை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டுக்காக பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டீச்சராக கஸ்தூரியும், பள்ளிக்கூட ஊழியராக சேரனும் உள்ளனர். வனிதா உட்பட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளாக உள்ளனர்.
இந்த டாஸ்க் நிச்சயம் குறும்பாக, ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தால், இதிலும் பிரச்சினைக்கு வழி வகுத்துள்ளார் கஸ்தூரி.
வாத்து வனிதா
ஆசிரியையான அவர் மாணவி வனிதாவை வாத்துப் பாடல் கூற அழைக்கிறார். அப்போது, ‘வாத்து.. வாத்துப் பாடல் பாட வாங்க வனிதா' என்கிறார். பார்க்கும் நமக்கே அவர் வனிதாவைத் தான் வாத்து என்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. வனிதாவுக்கு புரியாமல் இருக்குமா?
அடம் பிடிக்கும் வனிதா
உடனே வழக்கமான தனது வில்லி பார்வையை பார்த்து விட்டு, தன்னை வாத்து என அழைத்ததற்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என அடம் பிடிக்கிறார் வனிதா. இந்த விவகாரம் சேரன் வரை கொண்டு செல்லப்படுகிறது. எல்லாத்துலயும் பிரச்சினையா என வழக்கம் போல் தலையை சொரிந்து கொண்டு சேரன் நிற்கிறார்.
சாண்டிக்கு தண்டனை
இந்த டாஸ்க்கில் சாண்டி ஏதோ சேட்டை செய்து விட்டார் போல, அவரை மட்டும் மற்ற மாணவர்களிடம் இருந்து பிரித்து தனியாக கீழே அமர வைத்துள்ளனர். மற்றபடி வனிதாவைத் தவிர மற்ற அனைவருக்கும் பள்ளி சீருடை நன்றாகவே பொருந்துகிறது. கனா காணும் காலங்கள் சீரியல் ஞாபகம் வருகிறது.
|
புதிய பட்டபெயர்
ஏற்கனவே தனக்கு வத்திக்குச்சி என தர்ஷன் பெயர் வைத்துள்ளது கமல் மூலம் வனிதாவிற்கு தெரிய வந்து விட்டது. இப்போது கஸ்தூரி வேறு வாத்து என புதிய பட்டபெயர் வைத்து விட்டார். இந்த வாரம் ஏற்கனவே கஸ்தூரி நாமினேசனில் இருக்கிறார். அப்போ அக்காவோட அடுத்த டார்கெட் கஸ்தூரி தான்ங்கறது சொல்லித்தான் புரிய வேண்டுமா?