கவலைகளை மறந்த கவின்.. லாலாவுடன் மோதலோ மோதல்.. மகளுக்காக மல்லுகட்டும் சாண்டி.. சோ க்யூட் வீடியோ!

கவலைகளை மறந்து லாலாவுடன் ஜாலியாக விளையாடும் கவினின் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

Simbhu meets Sandy And Tharshan : பிக் பாஸ் முடிந்ததும் சாண்டியை பார்க்க வந்த சிம்பு -வீடியோ

சென்னை: சாண்டியின் மகள் லாலாவுடன் கவின் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே சாண்டியும், கவினும் நல்ல நண்பர்கள். பிக் பாஸ் வீட்டிலும் அவர்களது நட்பு தொடர்ந்தது. எப்போதும் இருவரும் சேர்ந்தே இருந்தனர். பெரும்பாலும் இவர்களுக்குள் சண்டை வந்ததேயில்லை.

நட்பிற்கு இலக்கணமாக சாண்டியும், கவினும் இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவர்களது நட்பைக் கொண்டாடினர்.

லாலா போட்டோ

லாலா போட்டோ

இருவரும் ஒரே கட்டிலில் படுத்துத் தூங்கியதால், கவின் தினமும் காலையில் சாண்டியின் மகளான லாலா புகைப்படத்தில் தான் கண் விழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தினமும் லாலா பாப்பாவுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சுவதும் உண்டு. அப்போதே லாலா மீது அவர் கொண்டிருந்த பாசம் வெளிப்பட்டது.

சாண்டி வீட்டில் விருந்து

சாண்டி வீட்டில் விருந்து

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிந்து விட்டது. முகென் பட்டத்தை வெல்ல, சாண்டி இரண்டாவது இடத்தைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக முகென், தர்ஷன் மற்றும் கவினுக்கு சாண்டி தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பொம்மை சண்டை

அதில் ஒரு வீடியோவில் கவின் ஒரு ஸ்கூட்டர் பொம்மையில் உட்கார்ந்திருக்க, லாலா கார் பொம்மையில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் தங்களது வண்டியை மோதி மோதி விளையாடுகின்றனர். இந்த விளையாட்டில் லாலா சிரிக்கிறார். லாலாவின் வண்டியை சாண்டி தான் கவின் வண்டியுடன் மோத வைக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த வீடியோவை கவின் மற்றும் சாண்டி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கவின் மாமா லாலாவுடன் குழந்தை மாதிரி விளையாடுகிறார் என அவர்கள் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். கவின் தனது கவலைகளை மறந்து இப்படி விளையாடுவது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X