சரவணன் மாதிரியே கண்ணை கட்டி வெளியேற்றப்பட்டாரா கவின்.. லீக்கான போட்டோவால் பரபரப்பு.. ஷாக்கில் ஆர்மி
கண்களைக் கட்டி கவினை பிக் பாஸில் இருந்து வெளியேற்றி விட்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: சரவணன் மாதிரியே கவினையும் கண்ணைக் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும்,தொடர்ந்து மக்களிடையே அதிக ஆதரவு பெற்று வருபவர் நடிகர் கவின். இதனாலேயே ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்ட போதும், மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று காப்பாற்றப்பட்டு வருகிறார்.
அவருக்கென சமூகவலைதளங்களில் ஆர்மிகள் உள்ளன. சமயங்களில் அஜித், விஜய் ரசிகர்களைப் போல் அவர்கள் சண்டைகூட போடுகின்றனர்.

எதிர்பார்ப்பு
தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று சர்ப்பிரைஸ் கொடுத்து வருகின்றனர். நேற்று முகெனின் அம்மாவும், தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இதனால் மற்ற போட்டியாளர்களுக்கும் தங்களைப் பார்க்க யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாண்டியின் மனைவி
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராகச் சென்ற சாக்ஷி இந்தத் தகவலை கவினிடம் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இந்நிலையில், தற்போது சாண்டியின் மனைவி, கவினிடம் அந்த விவகாரத்தை கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

புதிய புகைப்படம்
ஆனால், சரவணனைப் போலவே கவினும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கன்பெக்ஷன் அறையில் உள்ள கதவுக்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மிகவும் இருட்டான அந்த அறையில் கருப்பு உடையில் கண்கள் கட்டப்பட்டு நிற்கிறார் கவின்.

ஆர்மியினர் அதிர்ச்சி
இந்த புகைப்படத்தால் கவின் ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இதே போன்று ஒரு தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் வைரலானது. ஆனால், தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் தான் இருந்து வருகிறார். இன்றைய முதல் புரொமோவில் கூட கவின் பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்.

எந்தளவிற்கு உண்மை?
இருந்தபோதும் நேற்று இரவு முதல் இந்தப் படம் இணையத்தில் உலா வருகிறது. நேற்றிரவு தான் கவின் வெளியேறியதாகவும் சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர். நேற்றைய எபிசோட்டை நாளை தான் ஒளிபரப்புவர். எனவே, இன்றைய எபிசோட்டில் கவின் இருப்பார் என அவர்கள் கூறுகின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது நாளைய எபிசோட்டில் தான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











