சீட்டு மோசடியில் அம்மா கைது.. சோகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின் ?

தாயார் கைது செய்யப்பட்டது அறிந்து, கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

சேரன் அண்ணா தான் win பண்ணுவாறு | Exclusive interview with Bigg boss Sakshi

சென்னை: பண மோசடி செய்த வழக்கில் தனது தாயார் கைது செய்யப்பட்டது அறிந்து, கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து நட்புனா என்னானு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்தார். பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு அப்படம் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், கவினுக்கு மேற்கொண்டு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால், கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆனார்.

காதல் பிரச்சினைகள்

காதல் பிரச்சினைகள்

ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் காதல் பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். இப்போது லாஸ்லியாவும் அவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் இருந்து வெளியில் சென்றதும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

தாயார் கைது

தாயார் கைது

இந்நிலையில், சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கவினின் தாயாருக்கும், அவரது உறவினர்கள் இருவருக்கும் கடந்த வியாழன் அன்று ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

பொதுவாக வெளியில் நடக்கும் விசயங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் கடந்த இரண்டு சீசன்கள் போல் இல்லாமல், இம்முறை பிக் பாஸ் நிறைய சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று வனிதா மற்றும் மீராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுமிதா

மதுமிதா

பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சரவணன் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதே போல், நடிகை மதுமிதாவும் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இந்த அதிரடிகளின் தொடர்ச்சியாக கவினிடமும் அவரது தாயார் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டு, வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மது விவகாரம்

மது விவகாரம்

இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், முந்தைய சீசன்களை விட பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்னரே சமூகவலைதளங்களில் லீக்காகி விடுகிறது. மது வெளியேறிய விவகாரம் இதற்கு ஒரு உதாரணம்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

அதோடு, ஏற்கனவே குடும்பக் கடனை அடைக்கத் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக ஒருமுறை கவினே கூறி இருந்தார். தன் பெற்றோர் மீது அதிக பாசம் வைத்துள்ள கவின், அவர்களை தன் நண்பர்கள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு வந்திருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். தற்போது தீர்ப்பு பற்றி விவரம் தெரிந்ததால், பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X