'செல்லக்குட்டி... பெரிய பயணத்தின் ஆரம்பம் தான் இது'.. லாஸ்லியா பற்றி கவின் போட்ட சூசகப்பதிவு!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற முகென் மற்றும் சாண்டிக்கு கவின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மறைமுகமாக லாஸ்லியாவையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அது பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தாக்கம் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் தொடரும் என்றே தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு நடந்த பிக் பாஸ் இறுதிச் சுற்றில் முகென் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடம் சாண்டிக்கு கிடைத்தது. 3வது இடத்திற்கு லாஸ்லியாவும், 4வது இடத்திற்கு ஷெரினும் தேர்வானார்கள்.

கேம் சேஞ்சர்
இறுதி நாள் நிகழ்ச்சியின் போது கவினுக்கு கேம் சேஞ்சர் எனும் விருது வழங்கப்பட்டது. ‘5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வராமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்" என கமல் சொன்ன போது, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. இது சேரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியது.

மக்கள் ஆதரவு
அந்த அளவுக்கு பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்தவர் கவின். காதல் மன்னன், கடலை பார்ட்டி, நான்கு பெண்கள் விவகாரம் என கவினுக்கு எத்தனை கெட்டப் பேர்கள் இருந்தாலும், கடைசி வாரம் வரை அதிக வாக்குகள் பெற்று எவிக்டாகாமல் தப்பினார். இதற்கு காரணம் இளைஞர்களை கவின் வெகுவாக கவர்ந்தது தான்.

விலகிய கவின்
ஆரம்பத்தில் இருந்தே கவின் போட்டியில் இருந்து விலகும் மனப்பான்மையுடன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். நண்பர்களுக்காக விட்டுக்கொடுக்க தயார் என்றே அறிவித்து வந்தார். அதன்படியே, நடுவிலேயே தானாக போட்டியில் இருந்து விலகிவிட்டார்.
கவினின் வாழ்த்து
இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வென்ற முகெனுக்கும், 2வது இடம் பிடித்த சாண்டிக்கும் கவின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முகென் மற்றும் சாண்டியுடன் கமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "செல்லக்குட்டி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மிகப் பெரிய பயணத்தின் ஆரம்பம் தான் இது. இன்னும் பெருசா, பெருசா, பெருசா வாங்க", என வாழ்த்தியுள்ளார்.

லாஸ்லியாவுக்காகவா?
ஆனால் கவினின் இந்த பதிவு லாஸ்லியாவுக்கானது என ரசிகர்கள் நினைக்கின்றனர். லாஸ்லியாவின் படத்தை நைஸாக தவிர்த்துவிட்டு, கவின் பூடகமாக வாழ்த்தியுள்ளார் என அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் அதற்கு கவின் எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











