சிக்கனை வைத்து சேரனை அசிங்கப்படுத்திய லாஸ்லியா.. கமல் முன்னிலையிலேயே பழிக்குப்பழி!

சிக்கனை பார்த்ததும் தனக்காக காத்திருக்காமல் சேரன் சாப்பிட சென்றதாக லாஸ்லியா கூறியதை கேட்டு அவர் மனமுடைந்தார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo1:Day71:Cheran-னை வெளியேற்றும் Kavin

சென்னை: கமல் முன்னிலையில் சிக்கன் சாப்பாட்டை வைத்து லாஸ்லியா தன்னைப் பற்றி தவறாகப் பேசியதால் மனவேதனை அடைந்தார் இயக்குநர் சேரன்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் இல்லை. எனவே, நேற்றைய எபிசோட்டில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக பார்வையாளர்களை வைத்து, போட்டியாளர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

போட்டியாளர்களும் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினர். அதில் பலரது உண்மை முகத்தைப் பார்க்க முடிந்தது.

லாஸ்லியாவிடம் கேள்வி

லாஸ்லியாவிடம் கேள்வி

அப்போது லாஸ்லியாவிடம் போன் மற்றும் நேரில் கேள்வி கேட்ட பார்வையாளர்கள், ‘சேரன், கவின் விவகாரம்' பற்றிய அதிகம் கேட்டனர். அதற்கு வழக்கம் போல் லாஸ்லியாவும், ‘நான் குழப்பத்துல இருக்கேன். எனக்கு எது நிஜம் எது பொய்னு புரியலை' என தன் பாணியிலேயே இருக்கு, ஆனா இல்ல என்ற ரேஞ்சுக்கு பதிலளித்தார்.

சேரன்

சேரன்

ஆனால், அவர் கவினைப் பற்றி அப்படி சந்தேகமாகப் பேசவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சேரனைப் பற்றித் தான் அப்படிக் குறிப்பிடுகிறார், அவரது பாசத்தைத் தான் சந்தேகப்படுகிறார் என்பது நேற்று வெளிப்படையாகவே தெரிந்தது.

சிக்கன் சாப்பாடு

சிக்கன் சாப்பாடு

சனிக்கிழமைகளில் சிக்கன் சாப்பாடு வரும் போது, தனக்காகக் காத்திருக்காமல் அவர் முன்கூட்டியே சாப்பிட்டு விடுவதாக பெரிய குற்றச்சாட்டை லாஸ்லியா சேரன் பற்றிக் கூறினார். இதைக் கேட்ட சேரன் அதிர்ச்சி அடைந்தார். மகளாகப் பாவிக்கும் லாஸ்லியா இப்படி தன்னைப் பற்றிப் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.

கண்ணீர் விட்ட சேரன்

கண்ணீர் விட்ட சேரன்

இதனால் கண்ணீர் விட்ட அவர், கமலிடம் பேசுகையில், ‘சிக்கன் சாப்பாட்டிற்காக அலைபவர் போல் என்னை நினைத்து விட்டாரே. சமயங்களில் அவர் தாமதமாகச் சாப்பிட வருவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் தவிர்க்க இயலாமல் நான் முன்கூட்டியே சாப்பிட்டு விடுவேன்' என விளக்கமளித்தார்.

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இதே போல் சாப்பாட்டு பிரச்சினை பற்றி கமல் பேசினார். அப்போது சேரன் பசியோடு டைனிங் டேபிளில் காத்திருந்த போதும், லாஸ்லியா அவரை உதாசீனப் படுத்தியதாக மறைமுகமாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வாரம் சாப்பாட்டு விவகாரத்தை வைத்தே சேரனைப் பழி வாங்கி விட்டார் லாஸ்லியா என்று தான் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X