'லாஸ்லியாவுக்கு இலங்கையில் ஒரு காதலர் இருக்கிறார்... பெயர் தர்ஷன்'.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே லாஸ்லியாவுக்கு ஒரு காதலர் இருப்பதாக ஒரு பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே லாஸ்லியாவுக்கு ஒரு காதலர் இருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஆரம்பம் முதலே அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான அவரது தமிழ் உச்சரிப்பிற்கென்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. லாஸ்லியாவைப் போல் நிறைய பேர் கதைக்கத் தொடங்கி விட்டனர்.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவைப் போல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த புதிதில் எந்தப் பிரச்சினைகளிலும் சிக்காமல், ஜாலியாக ஆடிப்பாடி திரிந்து கொண்டிருந்தார் லாஸ்லியா. ஆனால், தற்போது நிலைமை அப்படியில்லை.

காதல் மோதல்
கவினுடன் காதல், சேரப்பாவுடன் மனக்கசப்பு, வனிதாவுடன் மோதல் எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறார். இதனால் அவரது துறுதுறுப்பு குறைந்து விட்டதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, லாஸ்லியா பற்றி பல்வேறு தகவல்களை இலங்கையில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் நண்பர் அல்லாதவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

திருமண வதந்தி
அப்படியாக ஆரம்பத்தில் லாஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. கல்லூரி காலத்தில் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. இதனால் லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மார்பிங் புகைப்படம்
பிறகு தான் தெரிந்தது, அந்தப் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என. அதில் வேறொரு மணமகளின் புகைப்படத்தில் லாஸ்லியாவின் புகைப்படத்தை ஒட்டி, வேண்டாதவர்கள் யாரோ சதி செய்திருந்தனர்.

காதலர் பெயர் தர்ஷன்
தற்போதும் அதே போல், ஒரு பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில், லாஸ்லியாவிற்கு ஏற்கனவே இலங்கையில் ஒரு காதலர் இருந்ததாகவும், அவரது பெயர் தர்ஷன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிக் பாஸ் தர்ஷன் இல்லை என்ற விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம்
கூடவே அதில் சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் யாரையும் காதலிக்கவில்லை என்றால், ஏன் உங்களை தொகுப்பாளர் பணியில் இருந்து மாற்றி, செய்தி வாசிப்பாளர் ஆக்கினார்கள் என கேட்கப்பட்டுள்ளது. ‘லவ் பண்ணுறது தப்பில்லை. ஆனாலும் எல்லாத்தையும் பண்ணிட்டு பண்ணாத மாதிரி இருக்கறது தான் தப்பு' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ்லியா லீலைகள்
லாஸ்லியா லீலைகள் என்ற பெயரில் இந்தப் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. லாஸ்லியாவோ அல்லது அவர் சார்பாக யாராவது விளக்கமளித்தால் தான் உண்மை தெரிய வரும். ஆனால், இதில் தர்ஷன் என பெயர்கூட குறிப்பிடப்பட்டுள்ளதால் லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவினின் பழைய காதல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின், ‘தான் மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அது முறிந்து விட்டது' என்றும் கூறியிருந்தார். அப்போது கூட, இது பற்றி வெளியில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று தான் லாஸ்லியா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











