பிக் பாஸ் டைட்டிலைவிட 'இது' தான் எனக்கு பெருமை.. வின்னர் முகென் போட்ட நெகிழ்ச்சி பதிவு
பிக் பாஸ்டைட்டிலை வென்றதை விட, அனைவரின் இதயத்தையும் வென்றதில் தான் தனக்கு பெருமை என முகென் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் இறுதிப் போட்டி நேற்றைக்கு நடந்தது. இதில் முகென் டைட்டில் வின்னராகவும், சாண்டி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களுக்கு தேர்வானார்கள்.

இந்நிலையில் முகென் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், " என் மீது உண்மையான அன்பு வைத்து, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கமல் சார், விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த டைட்டிலை வென்றதை விட, உங்கள் அனைவரின் இதயத்தையும் வென்றதில் தான் எனக்கு பெருமை", என முகென் தெரிவித்துள்ளார்.
கடந்த 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. முகென், சாண்டி, லாஸ்லியா, கவின், தர்ஷன், ஷெரின், சேரன், வனிதா, மதுமிதா, ரேஷ்மா, மீரா மிதுன், கஸ்தூரி, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











