விஜய், அஜித்துக்கு இணையாக டிரெண்டிங்கான ‘பிக் பாஸ்’ வனிதா.. ஆனா காது கூசுற அளவுக்கு திட்றாங்களே!

பிக் பாஸ் வனிதாவை டிரெண்டிங்காக்கி திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 72

சென்னை: பிக் பாஸ் வீட்டில் குட்டி கலாட்டாக்களை செய்து வரும் வனிதாவை ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கி திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

பிக் பாஸ் 3வது சீசன் போட்டியாளராக முதலில் உள்ளே சென்றவர் வனிதா. அங்கு அவர் செய்த பிரச்சினைகளால் 3வது வாரமே வெளியே அனுப்பப்பட்டார்.

ஆனால் வனிதா சென்றதும் கண்டெண்ட் கிடைக்காமல் தவித்த பிக் பாஸ், அவரை பின்வாசல் வழியாக (வைல்ட் கார்ட்) மூலம் மீண்டும் உள்ளே அழைத்து வந்தார். அவர் நினைத்தது போல் உள்ளே சென்ற நாள் முதல்,, இன்று வரை குட்டி கலாட்டாக்களை செய்து கண்டென்ட் தந்து வருகிறார் வனிதா.

இதில் உச்சக்கட்டமாக நேற்று வனிதா வாண்டடாக சாண்டி, கவின், தர்ஷன் உள்ளிட்டோரை வம்புக்கு இழுத்தது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்துள்ளது.

முதலிடம்

முதலிடம்

எனவே வனிதாவுக்கு ஹேஷ்டேக் போட்டு திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக், தமிழ்நாடு அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. தேசிய அளவிலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி இருக்கிறது. வனிதாவை திட்ட நெட்டிசன்கள் உதிர்த்த பொன் மொழிகளில் சில காது கூசும்படி உள்ளன.

பாவம் முகென்

"தர்ஷனுக்கு மற்றவர்கள் விட்டுக்கொடுப்பதை நினைத்து வனிதாவும், சேரனும் உண்மையில் கவலைப்படுகிறார்கள் என்றால், சேரன் ஏன் லாஸ்லியாவை நாமினேட் செய்யவில்லை. டாஸ்க்குகளில் ஒழுங்காக பெர்பார்ம் செய்யவில்லை எனக் கூறி முகெனை ஏன் சேரன் நாமினேட் செய்ய வேண்டும். சேரனைவிட டாஸ்க்குகளில் நன்றாக விளையாடிவர் முகென் தான்", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

சுத்தமான விஷம்

"வனிதா ஆதரவாளர்கள் அனைவரும் இந்த வாரம் அவர் ஹவுஸ்மேட்சிடம் சண்டை போடுவதை பார்த்து நிச்சயம் அவரை வெறுக்க தொடங்கிவிடுவர். அவர் ஒரு சுத்தமான விஷம். மற்றவர்களின் சாதனை கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. தர்ஷனை பார்த்து பொறாமைப்படுகிறார். தர்ஷனை ஆதரிக்கும் அனைவரையும் அவர் எதிர்ப்பார்", என இவர் தெரிவித்துள்ளார்.

தக்காளி சட்னியா?

"வனிதா மீண்டும் போட்டியாளராக வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவங்களுக்கு வந்தா ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. என்னுடைய ஆதரவு கவினுக்கு தான்", என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

சாண்டி

"தனக்கு எதிராக குரல்கொடுக்கும் யாரையும் வனிதா பேசவிடுவதே இல்லை. வழக்கம் போல கவின், லாஸ்லியா, தர்ஷன் தான் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். சேரன் ஏதோ சொல்ல வந்தார். ஆனால் அவரை எளிதாக வாயடைத்துவிட்டார். முகென் முயற்சி கூட செய்யவில்லை. ஷெரீன் தன்னுடைய நண்பர்களுக்கு எதிராக பேசமாட்டார். வழக்கம் போல சாண்டி சேஃப் கேம் ஆடினார்", என இவர் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X