twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மது விவகாரம்.. தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை தேவை.. களத்தில் குதித்த பிரபல நடிகர்!

    மதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

    |

    சென்னை: மதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விட்டது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சேரன் மீது அவதூறான புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

    அதன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

    காவிரி பிரச்சினை

    காவிரி பிரச்சினை

    டாஸ்க் ஒன்றின் போது அவர் கர்நாடகா மற்றும் காவிரிப் பிரச்சினை பற்றிய பேசியதால், அவருக்கும் ஷெரீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை.

    கமல்

    கமல்

    கமலுடன் மேடையில் தோன்றிய மதுவும், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை. அதோடு கமலும் கூட மதுமிதாவிற்கு அறிவுரை கூறினாரே தவிர, அவரை இந்த நிலைக்கு தள்ளியர்கள் யார் என்பதை தெரியப்படுத்தவில்லை. அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை.

    எஸ் வி சேகர் கருத்து

    எஸ் வி சேகர் கருத்து

    ஒருவேளை மதுமிதா மீதே தவறு இருந்தாலும் கூட, அவரை இந்த நிலைமைக்கு கொண்டு சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நெட்டிசன்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இதே கருத்தை பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை' எனத் தெரிவித்துள்ளார்.

    சென்னை போலீஸ்

    சென்னை போலீஸ்

    கூடவே இந்தப் பதிவில் அவர் தமிழக காவல்துறைத் தலைவரையும், தமிழக முதல்வர் அலுவலகத்தையும் எஸ்.வி.சேகர் டேக் செய்துள்ளார். எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவுக்கு பதில் கமெண்ட் வெளியிட்டுள்ளவர்கள், மது விவகாரத்தில் நீதி தேவை என வலியுறுத்தி, சென்னை போலீசையும் சேர்த்து டேக் செய்துள்ளனர்.

    கலவையான விமர்சனம்

    கலவையான விமர்சனம்

    ஏற்கனவே மது வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கலவையான விமர்சனம் மக்களிடையே உள்ளது. இந்நிலையில், எஸ்.வி.சேகர் இப்படி போலீஸ் விசாரணை தேவை என ஒரு பதிவு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதில்லை.

    மீண்டும் நேசமணி

    இது ஒருபுறம் இருக்க, வழக்கம் போலவே இந்த விவகாரத்திலும் பலர் காமெடியாக டிவீட் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த நெட்டிசன், ‘நேசமணி மேல சுத்தியல் போட்ட கிருஷ்ணமூர்த்தி மீதும் action எடுக்கனும் சார்... ' என மிகவும் எமோசனலாக ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Actor and politician S.Vee.Sekar insists police enquiry in Bigg boss Madhumitha suicide attempt issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X