நாய் என திட்டிய விவகாரம்.. மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சாக்ஷி.. பொழைக்க தெரிஞ்ச பொண்ணு பாஸ்!
பிக் பாஸ் ரசிகர்களை நாய் என குறிப்பிட்டது தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை சாக்ஷி.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் பார்வையாளர்களை நாய் என குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார் நடிகை சாக்ஷி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகை சாக்ஷி. அவர் வீட்டில் இருந்த போது வனிதாவுக்கும் ஷெரினுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக பேசிக்கொண்டனர்.
இதனால் மனமுடைந்து போன ஷெரின் தேம்பி தேம்பி அழுதார். அவரை தேற்றுவதற்காக ஆறுதல் கூறினார் சாக்ஷி. அப்போது 'நாய் குரைக்கும் என்பதற்காக நீ ஏன் சங்கடப்பட வேண்டும்' என ஷெரினிடம் சாக்ஷி கூறினார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த சூழலை பார்க்கும் போது, பிக் பாஸ் ரசிகர்களை தான் சாக்ஷி நாய் என குறிப்பிடுவதாக புரிந்துகொள்ளப்பட்டது.

கமலிடம் விளக்கம்
இதுகுறித்து பிக் பாஸ் அரங்க மேடையில் கமல் முன்னிலையிலேயே சாக்ஷி விளக்கம் அளித்தார். ஆங்கிலத்தில் தான் பேசிய வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில் பிக் பாஸ் பார்வையாளர்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
மன்னித்துவிடுங்கள்
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும்... எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

புண்படுத்தும் நோக்கம் இல்லை
எனது அறிக்கை பார்வையாளர்களை பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

ஆதரவு தாருங்கள்
உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தை போன்றவர்கள், அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கவும்", என சாக்ஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

பொழைக்க தெரிஞ்ச பொண்ணு
சாக்ஷியின் இந்தப் பதிவைப் பார்த்து நெட்டிசன்கள், ‘பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு பாஸ் சாக்ஷி. தொடர்ந்து தமிழ் படத்துல நடிக்கணும்னா மக்கள் ஆதரவு வேணும்னு எப்டி வெவரமா மன்னிப்பு கேட்டுடுச்சு' என கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











