'கவின் சாயம் சீக்கிரம் வெளுக்கும், '... ஷாக் தரும் சாக்‌ஷியின் இன்ஸ்டா பதிவுகள்

கவின் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக நடிகை சாக்ஷி குற்றச்சாட்டியுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sakshi 1st Post: மறைமுகமாக Kavinனை தாக்கும் Sakshi- வீடியோ

சென்னை : பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்வதாக சாக்‌ஷி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகள் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். பலரும் எதிர்பார்த்தது போல், அவரை சீக்ரெட் ரூமில் எல்லாம் வைக்கவில்லை. நேரடியாக வெளியே அனுப்பிவிட்டார் பிக் பாஸ்.

கமல் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தனது அனுபவங்களை சாக்ஷி பகிர்ந்து கொண்டார். பின்னர் அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களுடன் பேசும் வாய்ப்பு சாக்ஷிக்கு அளிக்கப்பட்டது.

கவினுக்கு பதிலடி

கவினுக்கு பதிலடி

கவின் சாக்ஷியிடமும், அவரது அப்பாவிடமும் மீண்டும் மன்னிப்பு கோரினார். அப்போது குறுக்கிட்டு பேசிய சாக்ஷியின் தந்தை, "இவர் ஏன் சாரி கேட்கிறார்? இது வெறும் விளையாட்டு தானே. எதற்காக கவின் மன்னிப்பு கேட்க வேண்டும்?" என கோபமாக கூறினார். கவினுக்கு சாக்ஷியின் தந்தை கொடுத்த செருப்படி என இதுகுறித்து நெட்டிசகள் கமெண்ட் செய்தனர்.

கவின் பற்றி பதிவு:

கவின் பற்றி பதிவு:

இந்நிலையில் இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி, "அப்பா தான் என்றும் சிறந்தவர். என்னால் செய்ய முடியாததை எனது தந்தை செய்துவிட்டார். கவினின் குறிக்கு நான் மிக எளிதில் இரையாகிவிட்டேன். உணர்வுப்பூர்வமாக என்னை அவர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் அவரால் எனது அப்பாவை ஏமாற்ற முடியாது", என குறிப்பிட்டுள்ளார்.

லவ் யூ அப்பா

லவ் யூ அப்பா

"லவ் யூ அப்பா. நீங்கள் தான் சிறந்தவர்" என மற்றொரு பதிவில் சாக்ஷி கூறியுள்ளார். மேலும் வீட்டுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவர் வீட்டுக்கு செல்வதில் ஆர்வமாகத்தான் இருந்தார்.

பெண்கள் :

பெண்கள் :

தனக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள ஒரு ரசிகருக்கு பதில் அளிக்கும் வகையில், "மிக்க நன்றி. பிக் பாஸ் வீட்டில் உள்ள பசங்களின் உண்மையான குணத்தை தமிழக மக்கள் நிச்சயம் விரைவில் பார்ப்பார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள பெண்களை அவர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வார்கள்", என சாக்ஷி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X