இசை எங்கிருந்து வருது: சாண்டியை வச்சு செஞ்ச பிக் பாஸ்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை 3 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். முதல் வீடியோவில் சாண்டி மாஸ்டர் நீரில்லா நீச்சல் குளத்தில் டான்ஸ் ஆடி கீழே விழுந்து கிடப்பது போன்று காட்டினார்கள்.

இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது தொடர்பாக பாத்திமா பாபு, சேரன் இடைய கருத்து வேறுபாடு ஏற்படுவது போன்று காட்டினார்கள். இந்த மோதல் எல்லாம் சும்மா, இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்னுடைய சங்கீத ராகத்தை வெளியே கொண்டு வருகிறேன் என்று சாண்டி கூற மோகன் வைத்யா மாமாமா என்று அவருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார்.
இதையடுத்து சாண்டி பாடுகிறேன் என்ற பெயரில் நம்மை கொடுமைப்படுத்துகிறார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சாண்டியை தான் அதிகம் கலாய்க்கிறார்கள் என்பதை பிக் பாஸும் கவனித்துவிட்டார் போன்று. இன்றைய ப்ரொமோ வீடியோக்களில் இரண்டு வீடியோக்களில் சாண்டியை தான் முக்கியமாக காட்டியுள்ளார்கள்.
மீம்ஸ் கிரியேட்டர்கள் மட்டும் அல்ல பிக் பாஸுமே சாண்டி மாஸ்டரை வச்சு செய்வது என்று முடிவு செய்துவிட்டார் போன்று. நெட்டிசன்களே நீங்கள் பிக் பாஸிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நீங்கள் போடும் ஃபேஸ்புக் போஸ்ட்டுகள் மற்றும் ட்வீட்டுகளை பிக் பாஸ் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
போட்டியாளர்கள் தேர்வில் இருந்து ப்ரொமோ வீடியோக்கள் வரை பிக் பாஸ் நெட்டிசன்களை கண்காணிப்பது நன்கு தெரிகிறது. சாண்டி பாடியதை பார்த்த நெட்டிசன்களோ, நீங்க தான் இந்த சீசனின் காமெடி பீஸ் போன்று. நீங்கள் பாடிப் பாடியே மோகன் வைத்யாவுக்கு இசை மறந்துவிடும் போல என்று தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி ஒரு நாள் தான் ஆகியுள்ளது. அதற்குள் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கு ஆர்மி துவங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள். இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியலையா பாஸ்?


Click it and Unblock the Notifications











